பிகில் திரைப்படத்தின் ரொமாண்டிக் போஸ்டர் ரிலீஸ்!

news18
Updated: October 12, 2019, 11:41 AM IST
பிகில் திரைப்படத்தின் ரொமாண்டிக் போஸ்டர் ரிலீஸ்!
பிகில் போஸ்டர்
news18
Updated: October 12, 2019, 11:41 AM IST
பிகில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் விஜய், தந்தை - மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் பிகில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் அக்டோபர் 12-ம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.


இந்நிலையில் தற்போது பிகில் படத்தின் ரொமாண்டிக்கான புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விஜய், நயன்தாரா இடம்பெற்றுள்ளனர். மேலும் போஸ்டரை வெளியிட்டு ட்வீட் செய்திருக்கும் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “படத்தில் எனக்கு பிடித்த முக்கியமான தருணம்” என்று கூறியுள்ளார்.



வீடியோ பார்க்க: தமிழ் சினிமாவில் நடிக்க தமிழ் கலாசாரத்தை கற்பது முக்கியம்: தமன்னா

First published: October 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...