பிகில் திரைப்படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் - அறிவிப்பு வெளியிட்ட படக்குழு

பிகில் திரைப்படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் - அறிவிப்பு வெளியிட்ட படக்குழு
பிகில்
  • News18
  • Last Updated: October 7, 2019, 6:19 PM IST
  • Share this:
பிகில் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் விஜய், தந்தை - மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன் தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் பிகில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் அக்டோபர் மாதத்தின் முதல்வாரத்தில் படத்தின் டீசர் வெளியாகும் என்றும் படத்தின் இயக்குநர் அட்லீ தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 12-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து படக்குழு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் பிகில் திரைப்படத்தின் ட்ரெய்லர் மிரட்டலாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் #bigiltrailer என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்டாக்கியுள்ளனர்.

வீடியோ பார்க்க: ஒரே பாட்டு ஓகோன்னு புகழ்... புள்ளிங்கோ புகழ் ஸ்டீபன்

First published: October 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading