பிகில் திரைப்படத்தின் தெலுங்கு உரிமம்... 400 திரையரங்குகளில் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு!

பிகில் திரைப்படத்தின் தெலுங்கு உரிமம்... 400 திரையரங்குகளில் ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு!
பிகில் - வெறித்தனம்
  • News18
  • Last Updated: September 11, 2019, 3:42 PM IST
  • Share this:
பிகில் படத்தின் தெலுங்கு உரிமம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிகில். முழுக்க முழுக்க பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்தப் படத்தில் விஜய் அப்பா, மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதுவரை படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


தீபாவளிக்கு படம் திரைக்கு வர உள்ள நிலையில் செப்டம்பர் மாதம் முழுக்க படம் குறித்த அப்டேட்ஸ் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்திருந்தது.

படத்தின் இசைவெளியீட்டு விழா செப்டம்பர் 19-ம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்தப் படத்தின் தெலுங்கு உரிமத்தை மகேஷ் கோனேரு மற்றும் ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பெற்றுள்ளதாகவும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பிகில் திரைப்படம் 400 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.Video: CINEMA ROUNDUP | மீண்டும் கைகோர்க்கும் சூர்யா - கெளதம் மேனன்

First published: September 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்