பிகில் படத்தின் ’சிங்கப் பெண்ணே’ பாடல் இணையத்தில் லீக்! படக்குழுவினர் அதிர்ச்சி

விஜய் இரண்டு வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் ‘வெறித்தனம்’ என்ற பாடலை விஜய் பாடவுள்ளார் என்ற தகவலும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது.

news18
Updated: July 16, 2019, 8:29 PM IST
பிகில் படத்தின் ’சிங்கப் பெண்ணே’ பாடல் இணையத்தில் லீக்! படக்குழுவினர் அதிர்ச்சி
பிகில்
news18
Updated: July 16, 2019, 8:29 PM IST
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘பிகில்’ படத்தின் ஒரு பாடல் இணையத்தில் சற்று முன்பு லீக் ஆனது, படக்குழுவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் பிகில். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். விஜயின் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

விஜய் இரண்டு வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் ‘வெறித்தனம்’ என்ற பாடலை விஜய் பாடவுள்ளார் என்ற தகவலும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது.
கதாநாயகியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரங்களில் ரெபா மோனிகா ஜான், இந்துஜா ஆகியோரும் நடித்துள்ளனர். பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி ‘பிகில்’ உருவாகியுள்ளது.

இந்நிலையில் ‘பிகில்’ படத்தின் பாடல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. ‘சிங்கப்பெண்ணே...’ எனத் தொடங்கும் பாடல் முழுமையாக இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருக்கிறார். ’பிகில்’ ஷூட்டிங்கின்போதே பல்வேறு புகைப்படங்கள் வெளிவந்து படக்குழுவினருக்கு அதிர்ச்சியளித்தது. இந்நிலையில் பாடலும் லீக்காகி இருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also see:

First published: July 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...