BIGIL: சிறப்பு காட்சியுடன் வெளியான 'பிகில்'... படம் எப்படி..? - ரசிகர்கள் கருத்து

BIGIL: சிறப்பு காட்சியுடன் வெளியான 'பிகில்'...  படம் எப்படி..? - ரசிகர்கள் கருத்து
  • Share this:
பிகில் திரைப்படத்தின் சிறப்புக்காட்சிகளுக்கு தமிழக அரசு கடைசி நேரத்தில் அனுமதி அளித்ததால் உற்சாகமடைந்த ரசிகர்கள், அதிகாலை முதலே திரையரங்குகள் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பிகில் படத்தின் சிறப்புக்காட்சி அதிகாலை 4 மணிக்கு தொடங்கப்பட்டது. இதையடுத்து திரையரங்குகளில் கூடிய விஜய் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், நடனமாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். ரசிகர்கள் அதிகளவு கூடியதால் ஒரு சில திரையரங்குகளில் சிறப்புக்காட்சி ஒரு மணி நேரம் தாமதமாக திரைப்படம் தொடங்கப்பட்டது.

பிகில் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகள் வெளியிடப்படலாம் என்ற கடைசி நேர அரசாங்க அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புக் காட்சிகள் அதிகாலை 4 மணிக்கு தொடங்கப்பட்டது. ஒரு சில திரையரங்களில் மட்டும் அதிக கூட்டம் காரணமாக ஒரு மணி நேரம் காலதாமதமாக தொடங்கப்பட்டது. விஜய் திரைப்படங்களுக்கு கடைசி நேரம் வரை ஏன் இந்த நெருக்கடி என்று பார்க்கப்படும் பொழுது, பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய சர்ச்சையான பேச்சுகள் தான் என்கின்றனர் ரசிகர்கள்.

இத்தனை தடைகள் மீறி இன்று கோலாகலமாக பட்டாசு வெடிகள் , டி ஜே டான்ஸ் என்று கொண்டாடப்பட்டது விஜய்யின் பிகில். ரசிகர்களுக்கு பேனர் வைக்க கூடாது என்று கேட்டுக் கொண்டதற்கு ஒரு பேனர்கள் கூட இல்லாமல் பிகில் கொண்டாடப்பட்டது. ஆண்கள் பெண்கள் என மகிழ்ச்சியுடனும் ஆரவாரத்துடனும் சந்தோசஷமாக திரைப்படத்தை காண சென்றனர்.

பிகில் திரைப்படம் பார்த்த ரசிகர்கள் தங்களது கலவையான கருத்தை இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதில் பெரும்பாலான ரசிகர்கள் தாங்கள் எதிர்பார்த்த அளவு படம் இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.








Also Watch

First published: October 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading