'ஆட்டம் வெறித்தனமா இருக்கும்' - பிகில் ட்ரெய்லர் வீடியோ!

news18
Updated: October 12, 2019, 6:37 PM IST
'ஆட்டம் வெறித்தனமா இருக்கும்' - பிகில் ட்ரெய்லர் வீடியோ!
news18
Updated: October 12, 2019, 6:37 PM IST
பிகில் திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் விஜய், தந்தை - மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் பிகில் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.


2நிமிடம் 41 விநாடிகள் நீளம் கொண்ட இந்த ட்ரெய்லரில் நடிகர் விஜய் பேசும் பஞ்ச் வசனங்களும், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளும், அட்லீயின் கலர்ஃபுல்லான காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக நேற்று முதலே இதற்கான ஹேஷ்டேக் உருவாக்கி ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

First published: October 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...