பிகில் பட வருமானவரி விவகாரம்... அர்ச்சனா கல்பாத்தி நேரில் ஆஜர்!

பிகில் பட வருமானவரி விவகாரம்... அர்ச்சனா கல்பாத்தி நேரில் ஆஜர்!
தனது தந்தையுடன் அர்ச்சனா கல்பாத்தி
  • Share this:
வருமான வரித்துறை புலனாய்வு அலுவலகத்தில் ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி (CEO) அர்ச்சனா கல்பாத்தி அகோரம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

"பிகில்" திரைப்படம் 300 கோடி ரூபாய் வர்த்தகம் ஆனதாக கிடைத்த தகவலை அடுத்து வருமான வரித்துறையினர் நடிகர் விஜயின் இல்லம், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் இல்லம் மற்றும் பைனான்சியர் அன்பு செழியனுக்கு சொந்தமான இடங்கள் என சென்னை, மதுரை உட்பட 38 இடங்களில் கடந்த 5 -ம் தேதி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

4 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனையில் அன்பு செழியனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து 77 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.300 கோடி வரி ஏய்ப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடிகர் விஜய், அன்பு செழியன் மற்றும் கல்பாத்தி அகோரம் ஆகியோர் நேரில் ஆஜராக வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர்.


இந்த நிலையில் நேற்று அன்பு செழியனின் ஆடிட்டர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு அலுவலகத்தில் நேரில் ஆஜராகினார். இன்று ஏ.ஜி.எஸ். என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியும், கல்பாத்தி அகோரத்தின் மகளுமான அர்ச்சனா கல்பாத்தி அகோரம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

அர்ச்சனா கல்பாத்தி முதன்மை செயல் அதிகாரியாக பதவியேற்ற பின்பு அவர் தாயரித்த முதல் படம் "பிகில்" என்பதால் அதன் அனைத்து விவகாரங்களையும் அவரே கவனித்து வந்துள்ளார். கடந்த வாரம் தி.நகரில் உள்ள ஏ.ஜி.எஸ் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் "பிகில்" திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வழஙகப்பட்ட ஊதியம், படத்திற்கு செலவு செய்தது தொடர்பான தரவுகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் வருமான வரித்துறையினர் கைப்பற்றியிருந்தனர்.

அதனை வைத்தே இன்றைய விசாரணையில் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திடம் வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் அதற்கு தனது ஆடிட்டருடன் ஆஜரான அர்ச்சனா கல்பாத்தி விளக்கம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.மேலும் படிக்க: 'போய் வேற வேலை இருந்தா பாருங்கடா'... மதம் மாறியதாக வெளியான பதிவு குறித்து விஜய் சேதுபதி ஆவேசம்

 
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading