‘பிகில்’ பிறந்தநாள் கொண்டாடிய பிரபலம்!

news18
Updated: July 8, 2019, 2:20 PM IST
‘பிகில்’ பிறந்தநாள் கொண்டாடிய பிரபலம்!
பிகில் பட ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு பிறந்தநாள் புகைப்படம்
news18
Updated: July 8, 2019, 2:20 PM IST
பிகில் பட ஒளிப்பதிவாளர் தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் காலபந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதுவரை படத்தின் 3 போஸ்டர்கள் வெளியாகியிருக்கும் நிலையில், இன்று மாலை முக்கிய அப்டேட் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனிடையே இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஜி.கே.விஷ்ணு தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அனைவரும் விசிலடிக்கும்படி போஸ் கொடுத்துள்ளனர்.




Loading...



மேலும், தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கும் ஜி.கே.விஷ்ணு இந்த பிறந்தநாளை பிகில் பர்த்டே என்றும் கூறியுள்ளார்.

வீடியோ பார்க்க: ஆஸ்கர் விருதுகளைத் தேர்வு செய்யும் குழுவில் இடம் பெற்ற இந்திய இயக்குநர்கள்!

First published: July 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...