பிகில் படத்தின் வெளிவராத உருக்கமான பாடல் வீடியோ!

பிகில் படத்தின் வெளிவராத உருக்கமான பாடல் வீடியோ!
பிகில்
  • Share this:
பிகில் படத்தின் பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

மூன்றாவது முறையாக விஜய் - அட்லீ கூட்டணியில் உருவான பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், ஆனந்தராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.

இந்தப் படத்தில் ராயப்பன் கதாபாத்திரத்தில் அப்பாவாக நடித்திருந்த நடிகர் விஜய்யை ரசிகர்கள் கொண்டாடினர். அதேபோல் ராயப்பனின் முந்தைய வாழ்க்கையை படமாக்கும் எண்ணமிருக்கிறதா என்றும் இயக்குநர் அட்லியிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இந்நிலையில் படத்தில் ராயப்பன் கதாபாத்திரம் கொல்லப்படும் போது பின்னணியில் ஒலிக்கும் உருக்கமான பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘காலமே’ என்று தொடங்கும் இந்தப் பாடல் மரணித்த தனது அப்பாவை நினைத்து வருந்தும் மகனின் குரலாக ஒலிக்கிறது. நேற்று வெளியான இந்தப் பாடல் இதுவரை 7 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. பாடல் வீடியோவைப் பார்த்த பலரும் கண்ணீர் வடித்ததாக கமெண்ட் செய்துள்ளனர்.

First published: November 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading