பிகில் அப்டேட்... டீசர், ட்ரெய்லர் அல்ல, இது அதுக்கும் மேல...!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தை தமிழகத்தில் ஸ்கிரீன் சீன் நிறுவனம் வெளியிடுகிறது.

news18
Updated: July 8, 2019, 10:30 AM IST
பிகில் அப்டேட்... டீசர், ட்ரெய்லர் அல்ல, இது அதுக்கும் மேல...!
பிகில் அப்டேட்
news18
Updated: July 8, 2019, 10:30 AM IST
விஜய் நடிக்கும் பிகில் படம் குறித்த அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். விஜய்யின் பிறந்தநாளன்று பிகில் படத்தின் மூன்று போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. இந்தப் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை மிக அதிக தொகைக்கு யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ் என்ற நிறுவனம் எக்ஸ் ஜென் ஸ்டுடியோ என்ற நிறுவனத்துடன் இணைந்து வாங்கியுள்ளது
Loading...


இந்தப் படத்தை தமிழகத்தில் ஸ்கிரீன் சீன் நிறுவனம் வெளியிடுகிறது.



இந்நிலையில் பிகில் படம் குறித்த அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அதில், ‘டீசர், ட்ரெய்லர், சிங்கிள், ஆடியோ ரிலீஸ் தேதி, படம் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் கிடையாது. ஆனால் நீங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். என்னவென்று யோசியுங்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





Also watch

First published: July 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...