பிகில் முதல் வாரத்தில் தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூல்... அனைவருக்கும் லாபம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிகில் முதல் வாரத்தில் தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூல்... அனைவருக்கும் லாபம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிகில் திரைப்படம் முதல் வாரத்தில் உலகம் முழுவதும் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. படம் தமிழகத்தில் மட்டும் முதல் வாரத்தில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தை தமிழகத்தில் வெளியிட்ட ஸ்கிரீன் சீன் நிறுவனம் அறிவித்துள்ளது.
  • News18
  • Last Updated: November 2, 2019, 1:17 PM IST
  • Share this:
பிகில் படம் தமிழகத்தில் மட்டும் முதல் வாரத்தில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தை தமிழகத்தில் வெளியிட்ட ஸ்கிரீன் சீன் நிறுவனம் அறிவித்துள்ளது.

விஜய்-அட்லி கூட்டணியில் உருவான பிகில் திரைப்படம் கடந்த 25-ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது. படம் வெளியானது முதலே பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டி வரும் பிகில் திரைப்படம் முதல் வாரத்தில் உலகம் முழுவதும் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

படத்தின் வசூல் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில் படத்தை தமிழத்தில் வெளியிட்ட ஸ்கிரீன் சீன் நிறுவனம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஸ்கிரீன் சீன் நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தர் ஆறுமுகம் தி ஹிந்துவுக்கு அளித்த பேட்டியில், பிகில் படம் தமிழகத்தில் மட்டும் முதல் வாரத்தில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறியுள்ளார்.


மேலும் படம் அனைவருக்கும் லாபகரமாக அமைந்துள்ளதாகவும் தமிழ் சினிமாவில் இவ்வளவு குறுகிய காலத்தில் எந்த படமும் இந்த அளவுக்கு லாபம் தர முடியாது என்றும் கூறியுள்ளார்.

பிகில் படம் தமிழகத்தை தாண்டி அமெரிக்காவில் 1 மில்லியன் அமெரிக்க டாலர், அரபு நாடுகளில் 16 கோடி, பிரான்சில் 27,000 பார்வையாளர்கள், Uk-வில் 4 கோடி, ஆஸ்திரேலியாவில் 2.30 கோடி, மலேசியாவில் 15 கோடி, கேரளாவில் 15 கோடி, கர்நாடகாவில் 14 கோடி, ஆந்திரா-தெலங்கானாவில் 14 கோடி, வட இந்தியாவில் 4 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Also watch
First published: November 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்