அரசியல் விழிப்புணர்வு தேவை என்பதை விஜய் குறிப்பிட்டுள்ளார் - சீமான்

அரசியல் விழிப்புணர்வு தேவை என்பதை  விஜய் குறிப்பிட்டுள்ளார் - சீமான்
சீமான் | விஜய்
  • News18
  • Last Updated: September 22, 2019, 1:39 PM IST
  • Share this:
மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு தேவை என்பதையே நடிகர் விஜய் தனது பேச்சில் குறிப்பிட்டதாக சீமான் கூறியுள்ளார்.

பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய், யாரை கைது செய்ய வேண்டுமோ அவர்களை விட்டுவிடுவதாகவும், பிரிண்டர்சை பிடிப்பதாகவும் கூறினார்.

யார் மேல் கோபப்பட வேண்டுமோ அவர்களை விட்டு விட்டு லாரி ஓட்டுநரை பிடிப்பதாகவும் விஜய் குற்றம்சாட்டினார்.


பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் அச்சகத்திற்கு சீல் வைத்ததையும், முன்னாள் கவுன்சிலரை விட்டுவிட்டு லாரி ஓட்டுநரை பிடித்ததையும் அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார். மேலும் பேனரால் இறந்த சுபஸ்ரீ குடும்பத்திற்கு ஆறுதல் கூறிக் கொள்வதாக தெரிவித்த விஜய், இதுபோன்ற சமூக பிரச்னைகளை கவனம் செலுத்தி ஹேஷ்டேக் போடுமாறும் ரசிகர்களை விஜய் கேட்டுக்கொண்டார். சமூகவலைதளங்களில் தனது ரசிகர்கள் மோதலில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுரை வழங்கினார்.

ரசிகர்கள் கனவுகளோடு பேனர் வைக்கும்போது அதை கிழித்தால் அவர்களுக்கு கோபம் வருவது நியாயம்தான் என்ற விஜய், என் டோட்டாவை கிழிங்க.. உடைங்க ஆனால் என் ரசிகன் மேல கை வைக்காதிங்க என்றார். கேட்க முடிந்தால் கேளுங்க… இல்லன்னா… என எச்சரிக்கை விடுக்கும் விதத்திலும் விஜய் பேசினார்.

அரசியல்ல புகுந்து விளையாடுங்க.. ஆனா விளையாட்டுல அரசியல கொண்டு வராதீங்க என்றும் விஜய் கூறினார். எவனை எங்க உக்கார வெக்கணும்னு திறமையை வைத்து முடிவு பண்ணுங்க என்றும் கூறினார்.எம்ஜிஆர். கருணாநிதி குறித்தும் நடிகர் விஜய் மேடையில் பேசினார். எம்.ஜி.ஆரிடம் கருணாநிதி குறித்து அமைச்சர் ஒருவர் தவறாக பேசியதாக கூறிய விஜய், அந்த அமைச்சரை எம்.ஜி.ஆர் காரில் இருந்து வெளியேற்றியதாக தெரிவித்தார். எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும் என்றும் நடிகர் விஜய் தெரிவித்தார்.

விஜய் பேசிய பேச்சு குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, நடிகர் விஜயை கேட்டுத்தான் யாரை எங்க வைக்க வேண்டும் என்பதனை தமிழக மக்கள் தீர்மானிக்க வேண்டியது இல்லை. திரைப்பட நடிகராக தனது படம் ஓட வேண்டும் என்பதற்காக சிலர் பரபரப்பாக பேசுகிறார்கள்.

நடிகரும் விஜய் யாருடைய பேச்சை கேட்டு சொன்னார் என்று தெரியவில்லை. அவருடைய படங்கள் வெளிவருவதற்கு அரசு உதவி செய்துள்ளது, அவருடைய மனசாட்சிக்கு தெரியும்” என்றார்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், “இசை வெளியீட்டு விழாவில் திரைப்படத்தை பற்றி பேசலாம்; ஒருவரை விமர்சித்து விளம்பரம் தேட அவசியமில்லை. பிறரை விமர்ச்சிக்கும் முன்பு தங்களின் நிலையை நடிகர்கள் உணர்ந்து கொள்வது நல்லது” என்றார்.

இந்நிலையில் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு தேவை என்பதையே நடிகர் விஜய் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளதாகவும், சரியான தலைவர்களை தேர்வு செய்யத் தவறியதால் தவறு நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வீடியோ பார்க்க: சக்தே இந்தியாவின் காப்பியா பிகில்?

First published: September 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading