பிகில் ஆடியோ விழாவில் விஜய்யின் பேச்சு காப்பியா? டிரெண்டாகும் வீடியோ

பிகில் ஆடியோ விழாவில் விஜய்யின் பேச்சு காப்பியா? டிரெண்டாகும் வீடியோ
நடிகர் விஜய்
  • News18 Tamil
  • Last Updated: September 25, 2019, 9:06 PM IST
  • Share this:
பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வந்த நிலையில் தற்போது வேறொரு சர்ச்சை எழுந்துள்ளது.

தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த 19-ம் தேதி சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் குட்டிக்கதை ஒன்று சொன்னார். பூக்கடையில் வேலை செய்யும் ஒருவரை பட்டாசு கடையில் உட்கார வைத்தால் என்னவாகும் என்பதே இந்த கதை. இந்த கதையின் மூலம் யாரை எங்க உட்கார வைக்கனுமோ அவங்கள அங்க தான் உட்கார வைக்கனும் என்று சொல்லி முடித்தார்.

நடிகர் விஜய்யின் இந்த பேச்சு நேரடியாக அரசியல் உள்ளவர்களை தாக்குவதாக இருந்தது என ஆளுட்கட்சி தரப்பினர் கூறிவந்தனர். இந்நிலையில் ஆடியோ விழாவில் விஜய் பேசியதும் காப்பி என மேடையில் ஒரு பெண் பேசும் வீடியோவை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.


அந்த வீடியோவில் பெண் ஒருவர் மேடையில் பேசுபதும் அதே குட்டிக்கதையை தான். அந்த பெண், விஜய் இருவரும் “இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்துஅதனை அவன்கண் விடல்“ என்ற திருக்குறளுடன் இந்த கதையை சொல்லவார்கள்.





இந்த வீடியோவை வைத்து பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதும் காப்பி என அவருக்கு நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஆனால் விஜய் பேசுவதற்கு முன்பே குட்டிக்கதை என்று தான் ஆரம்பிப்பார். விஜய்யின் பேச்சுக்கு ஆதரவு பெருகி வருவதால் அவருக்கு எதிராக சிலர் இந்த வீடியோவை டிரெண்ட் செய்து வருவதாக அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது பற்றி விவரத்தையும் அறிய முடியவில்லை.

Also Watch : பிகில் பாடலும் காப்பியா?

First published: September 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...