பிகில் இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி கொடுத்தது ஏன்? - கல்லூரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கும் தமிழக அரசு

பிகில் இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி கொடுத்தது ஏன்? - கல்லூரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கும் தமிழக அரசு
விஜய்
  • News18
  • Last Updated: September 24, 2019, 12:29 PM IST
  • Share this:
பிகில் இசை வெளியீட்டு விழாவுக்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் தமிழக அரசின் உயர்கல்வித்துறை விளக்கம் கேட்டுள்ளது.

அட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் அப்பா - மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, யோகிபாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, விவேக், ஜாக்கி ஷெரஃப் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.


தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த 19-ம் தேதி சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய், பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடுமபத்துக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,  அரசியல்ல புகுந்து விளையாடுங்க.. ஆனா விளையாட்டுல அரசியல கொண்டு வராதீங்க என்றார்.

Loading...

இதையடுத்து குட்டிக்கதை ஒன்றை சொன்ன விஜய் எவனை எங்க உக்கார வெக்கணும்னு திறமையை வைத்து முடிவு பண்ணுங்க என்றார்.

விஜயின் இந்தப் பேச்சுக்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

இந்நிலையில் பிகில் இசைவெளியீட்டு விழாவுக்கு எந்த அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்கியது என்று தமிழக அரசின் உயர்கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

முன்னதாக பிகில் படத்தின் போஸ்டரில் இறைச்சி வியாபாரிகளை இழிவுபடுத்துவதாக கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

First published: September 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...