விஜய்யை காக்கா பிடிக்க இப்படி பண்ணுவீங்களா?... விவேக்கை எச்சரித்த சிவாஜி ரசிகர்கள்!

news18
Updated: September 24, 2019, 6:50 PM IST
விஜய்யை காக்கா பிடிக்க இப்படி பண்ணுவீங்களா?... விவேக்கை எச்சரித்த சிவாஜி ரசிகர்கள்!
விஜய் | விவேக்
news18
Updated: September 24, 2019, 6:50 PM IST
பிகில் இசைவெளியீட்டு விழா மேடையில் நடிகர் சிவாஜியின் பாடலை விவேக் கிண்டலடித்ததாக கூறி அவருக்கு சிவாஜி சமூகநலப் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.

விஜய் - அட்லீ கூட்டணியில் உருவான பிகில் திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் விஜய் தெரிவித்த அரசியல் கருத்துகளுக்கு அதிமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், சிவாஜி கணேசனின் பாடலை கிண்டலடித்ததாக கூறி விவேக்குக்கு சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விவேக் 1960-ம் ஆண்டு வெளிவந்த சிவாஜி கணேசன் - வைஜெயந்தி மாலா நடித்த இரும்புத்திரை திரைப்படத்தின் ‘நெஞ்சில் குடியிருக்கும்’ என்று தொடங்கும் அருமையான பாடலைக் கிண்டலடித்திருக்கிறார்.

மேடை கிடைத்துவிட்டால், கூட்டத்தைப் பார்த்துவிட்டால் சிலர் உளற ஆரம்பித்துவிடுவார்கள். அந்த வரிசையில் நடிகர் விவேக்கும் இணைந்துள்ளார். எந்த நடிகரை வேண்டுமானாலும் தூக்கி வைத்துக் கொண்டாடுங்கள், எந்த இசையமைப்பாளர் அல்லது பாடலை வேண்டுமானால் பாராட்டுங்கள் தவறில்லை. ஆனால் ஒரு நடிகரை காக்கா பிடிப்பதற்காக, ஏற்கெனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள ஒரு பாடலை கிண்டலடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.



Loading...

ஏதோ இப்போதுதான் அந்தப் பாடல் மக்களுக்கே தெரிய வருவதுபோலக் கூறும் விவேக், ‘நெஞ்சில் குடியிருக்கும்’ என்ற 1960-ம் ஆண்டு வெளிவந்த பாடல் மிகவும் மிகவும் வரவேற்பைப் பெறவில்லை என்றால் அதனை ஏன் அதே டியூனை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்று கூறத் தயாரா? டியூனுக்கு ஏற்பட்ட பஞ்சம் காரணமாக பிரபலமான டியூன் என்பதாலேயே அதனைக் காப்பியடித்து பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் பேசியிருக்கிறார் விவேக்.

ஏற்கெனவே ஒரு திரைப்படத்தில் சிவாஜி கணேசனின் புகழ்பெற்ற பராசக்தி திரைப்படத்தில் வரும் நீதிமன்ற வசனத்தைப் பேசி கிண்டலடித்திருந்தார் விவேக். இப்போது சிவாஜி கணேசனின் அருமையான திரைப்படப் பாடலை பொதுமேடையில் கிண்டலடித்திருக்கிறார். இதுபோல தொடர்ந்து விவேக் செய்தால் அவருக்கெதிராக ரசிகர்களை ஒன்றுதிரட்டி சிவாஜி சமூக நலப்பேரவை போராட்டம் நடத்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ பார்க்க: சென்னை வீதிகளில் காசில்லாமல் அலைந்திருக்கிறேன் - நடிகர் சூரி உருக்கம்



First published: September 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...