பிகில் பட புதிய போஸ்டர் ரிலீஸ்... ட்ரெண்டிங்கில் முதலிடம்!

பிகில் பட புதிய போஸ்டர் ரிலீஸ்... ட்ரெண்டிங்கில் முதலிடம்!
பிகில்
  • News18
  • Last Updated: September 15, 2019, 4:25 PM IST
  • Share this:
பிகில் பட இசைவெளியீட்டு விழாவுக்காக புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதை இந்திய அளவில் ட்ரெண்டாக்கியுள்ளனர் விஜய் ரசிகர்கள்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிகில். முழுக்க முழுக்க பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்தப் படத்தில் விஜய் அப்பா, மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதுவரை படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் விஜய் பாடிய வெறித்தனம் என்ற பாடல் யூடியூப்பில் சக்கைபோடு போட்டு வருகிறது.


இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 19-ம் தேதி சென்னையில் நடைபெறும் என்றும், செப்டம்பர் 22-ம் தேதி மாலை மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை இந்திய அளவில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

 


வீடியோ பார்க்க: பிகில் பாடலும் காப்பியா?

First published: September 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்