விஜய் சொல்லும் போது மந்திரசக்தி... கண்டனம் தெரிவித்த சிவாஜி ரசிகர்களுக்கு விவேக் விளக்கம்!

விஜய் சொல்லும் போது மந்திரசக்தி... கண்டனம் தெரிவித்த சிவாஜி ரசிகர்களுக்கு விவேக் விளக்கம்!
விஜய் | விவேக்
  • News18
  • Last Updated: September 25, 2019, 11:45 AM IST
  • Share this:
சிவாஜி கணேசனின் நெஞ்சில் குடியிருக்கும் பாடலை கிண்டலடித்ததாகக் கூறி சிவாஜி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு நடிகர் விவேக் விளக்கமளித்துள்ளார்.

கடந்த 19-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விவேக், சிவாஜி கணெசேன் - வைஜெயந்தி மாலா நடிப்பில் வெளியான இரும்புத்திரை படத்தில் இடம்பெற்ற நெஞ்சில் குடியிருக்கும் பாடலைப் பாடி அதை பிகில் பட பாடலோடு ஒப்பிட்டு பேசினார்.

இதைக் கண்டித்து சிவாஜி சமூக நலப்பேரவை அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், “பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விவேக் 1960-ம் ஆண்டு வெளிவந்த சிவாஜி கணேசன் - வைஜெயந்தி மாலா நடித்த இரும்புத்திரை திரைப்படத்தின் ‘நெஞ்சில் குடியிருக்கும்’ என்று தொடங்கும் அருமையான பாடலைக் கிண்டலடித்திருக்கிறார்.


மேடை கிடைத்துவிட்டால், கூட்டத்தைப் பார்த்துவிட்டால் சிலர் உளற ஆரம்பித்துவிடுவார்கள். அந்த வரிசையில் நடிகர் விவேக்கும் இணைந்துள்ளார். எந்த நடிகரை வேண்டுமானாலும் தூக்கி வைத்துக் கொண்டாடுங்கள், எந்த இசையமைப்பாளர் அல்லது பாடலை வேண்டுமானால் பாராட்டுங்கள் தவறில்லை. ஆனால் ஒரு நடிகரை காக்கா பிடிப்பதற்காக, ஏற்கெனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள ஒரு பாடலை கிண்டலடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏதோ இப்போதுதான் அந்தப் பாடல் மக்களுக்கே தெரிய வருவதுபோலக் கூறும் விவேக், ‘நெஞ்சில் குடியிருக்கும்’ என்ற 1960-ம் ஆண்டு வெளிவந்த பாடல் மிகவும் மிகவும் வரவேற்பைப் பெறவில்லை என்றால் ஏன் அதே டியூனை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்று கூறத் தயாரா? டியூனுக்கு ஏற்பட்ட பஞ்சம் காரணமாக பிரபலமான டியூன் என்பதாலேயே அதனைக் காப்பியடித்து பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் பேசியிருக்கிறார் விவேக்.

ஏற்கெனவே ஒரு திரைப்படத்தில் சிவாஜி கணேசனின் புகழ்பெற்ற பராசக்தி திரைப்படத்தில் வரும் நீதிமன்ற வசனத்தைப் பேசி கிண்டலடித்திருந்தார் விவேக். இப்போது சிவாஜி கணேசனின் அருமையான திரைப்படப் பாடலை பொதுமேடையில் கிண்டலடித்திருக்கிறார். இதுபோல தொடர்ந்து விவேக் செய்தால் அவருக்கெதிராக ரசிகர்களை ஒன்றுதிரட்டி சிவாஜி சமூக நலப்பேரவை போராட்டம் நடத்தும்” என்று கூறப்பட்டிருந்தது.

Loading...

இந்நிலையில் தற்போது இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்திருக்கும் நடிகர் விவேக், “1960ல் இரும்புத்திரை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பாடிய பாடலின் முதல் வரி“நெஞ்சில் குடி இருக்கும்”. அப்போது அது காதல் உணர்வைக் குறித்தது.ஆனால் இப்போது சகோ விஜய் அதை சொல்லும் போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது.இதுவே நான் பேசியது.அன்பு உள்ளங்கள் புரிந்து கொள்க” என்று கூறியுள்ளார்.

வீடியோ பார்க்க: என் நெஞ்சில் குடியிருக்கும்... நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சுகள்

First published: September 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...