”எங்க தளபதிய வச்சு அரசியல் பண்றாங்களா...” பிகில் இசை விழாவில் கட்டுக்கடங்காத ரசிகர் கூட்டம்.. அனுமதி மறுப்பு.. தடியடி..

Web Desk | news18-tamil
Updated: September 19, 2019, 9:50 PM IST
”எங்க தளபதிய வச்சு அரசியல் பண்றாங்களா...” பிகில் இசை விழாவில் கட்டுக்கடங்காத ரசிகர் கூட்டம்.. அனுமதி மறுப்பு.. தடியடி..
Web Desk | news18-tamil
Updated: September 19, 2019, 9:50 PM IST
சென்னை தாம்பரத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெறும் நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டதால் போலீசார் தடியடி நடத்தி அனைவரையும் கலைத்தனர்.

இப்படத்தை தயாரித்துள்ள ஏ.ஜி.எஸ். நிறுவனம் இசை வெளியீட்டு விழாவுக்கான டிக்கெட்டிகளை விநியோகித்தது.

இந்நிலையில் பத்தாயிரம் இருக்கைகள் மட்டுமே உள்ள அரங்கிற்கு இருபதாயிரம் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டிருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டினர். இதனால் டிக்கெட்டுடன் தாம்பரத்தை முற்றுகையிட்ட ரசிகர்கள் அரங்கிற்குள் வலுகட்டாயமாக நுழைய முயன்றனர்.


ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாத போலீசார் அனைவரையும் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனத்தை கடுமையாக சாடினர்.

மேலும் இது போன்ற தவறை மீண்டும் செய்யாதீர்கள் எனவும் தயாரிப்பு நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Video:

Loading...

Watch Also:
First published: September 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...