முதலிடத்தில் பிகில் இசை வெளியீட்டு விழா....சர்காரை மிஞ்சி டிஆர்பி-இல் சாதனை

முதலிடத்தில் பிகில் இசை வெளியீட்டு விழா....சர்காரை மிஞ்சி டிஆர்பி-இல் சாதனை
விஜய்
  • News18
  • Last Updated: October 3, 2019, 3:00 PM IST
  • Share this:
பிகில் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி 95,94,000 பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிகில். முழுக்க முழுக்க பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்தப் படத்தில் விஜய் அப்பா, மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


இந்நிலையில் படத்தின் பாடல்கள் செப்டம்பர் 19-ம் தேதி வெளியானது. சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிரமாண்டமாக நடைபெற்ற இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 22-ம் தேதி மாலை 6.30 மணிக்கு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி 12.86 டிஆர்பி புள்ளிகள் பெற்று 9,5,94,000 பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. ஒரு பாடல் வெளியீட்டு விழாவுக்கு அதிகமாக கிடைத்த டிஆர்பி புள்ளிகள் இதுவாகும்

முன்னதாக சர்கார் பாடல் வெளியீட்டு விழா 12.31 டிஆர்பி புள்ளிகளை பெற்றிருந்தது.


Also watch

First published: October 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading