சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் அரசை விமர்சித்த விஜய்!

சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் அரசை விமர்சித்த விஜய்!
விழா மேடையில் விஜய்
  • News18
  • Last Updated: September 20, 2019, 6:57 AM IST
  • Share this:
சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த பிரச்னையில் கோபப்பட வேண்டியர்களை விட்டுவிட்டு லாரி டிரைவரை பிடிப்பததாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா தாம்பரம் அருகே சோமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்தது. அதில் பங்கேற்ற விஜய், யாரை கைது செய்ய வேண்டுமோ அவர்களை விட்டுவிடுவதாகவும், பிரிண்டர்சை பிடிப்பதாகவும் அவர் கூறினார். யார் மேல் கோபப்பட வேண்டுமோ அவர்களை விட்டு விட்டு லாரி ஓட்டுநரை பிடிப்பதாகவும் விஜய் குற்றம்சாட்டினார்.

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் அச்சகத்திற்கு சீல் வைத்ததையும், முன்னாள் கவுன்சிலரை விட்டுவிட்டு லாரி ஓட்டுநரை பிடித்ததையும் அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார். பேனரால் இறந்த சுபஸ்ரீ குடும்பத்திற்கு ஆறுதல் கூறிக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற சமூக பிரச்னைகளை கவனம் செலுத்தி ஹேஷ்டேக் போடுமாறும் ரசிகர்களை விஜய் கேட்டுக்கொண்டார். சமூகவலைதளங்களில் தனது ரசிகர்கள் மோதலில் ஈடுபட வேண்டாம் என என அறிவுரை வழங்கினார். ரசிகர்கள் கனவுகளோடு பேனர் வைக்கும்போது அதை கிழித்தால் அவர்களுக்கு கோபம் வருவது நியாயம்தான் என்ற விஜய், என் டோட்டாவை கிழிங்க.. உடைங்க ஆனால் என் ரசிகன் மேல கை வைக்காதிங்க என்றார். கேட்க முடிந்தால் கேளுங்க… இல்லன்னா… என எச்சரிக்கை விடுக்கும் விதத்திலும் விஜய் பேசினார்.

அரசியல்ல புகுந்து விளையாடுங்க.. ஆனா விளையாட்டுல அரசியல கொண்டு வராதீங்க என்றும் விஜய் கூறினார். எவனை எங்க உக்கார வெக்கணும்னு திறமையை வைத்து முடிவு பண்ணுங்க என்றும் கூறினார். எம்ஜிஆர். கருணாநிதி குறித்தும் நடிகர் விஜய் மேடையில் பேசினார். எம்.ஜி.ஆரிடம் கருணாநிதி குறித்து அமைச்சர் ஒருவர் தவறாக பேசியதாக கூறிய விஜய், அந்த அமைச்சரை எம்.ஜி.ஆர் காரில் இருந்து வெளியேற்றியதாக தெரிவித்தார். எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும் என்றும் நடிகர் விஜய் தெரிவித்தார். விழாவில் பேசிய பிகில் படத்தின் இயக்குநர் அட்லி, ஆங்கிலமும் இந்தியும் மொழிகள் மட்டுமே அறிவு அல்ல என்றும் அதேபோல கறுப்பு என்பது ஒரு நிறம் மட்டுமே என்றும் கூறினார். பிகில் படத்தின் டீசர் அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகும் என்றும் அட்லி தெரிவித்தார்.

 
First published: September 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...