பிகில் விழாவில் சன் டிவி கட் செய்த வசனத்தை வெளியிட்ட டேனியல் பாலாஜி!

news18
Updated: September 24, 2019, 10:52 AM IST
பிகில் விழாவில் சன் டிவி கட் செய்த வசனத்தை வெளியிட்ட டேனியல் பாலாஜி!
டேனியல் பாலாஜி - நடிகர்
news18
Updated: September 24, 2019, 10:52 AM IST
பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் கட் செய்யப்பட்ட தனது பேச்சை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் டேனியல் பாலாஜி.

அட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் விஜய், தந்தை - மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன் தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த 19-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதை நேற்று மாலை 6.30 மணிக்கு சன் டிவி ஒளிபரப்பியது.


இந்நிலையில் படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் டேனியல் பாலாஜி, விஜய் குறித்து தான் இசைவெளியீட்டு விழாவில் பேசியதில் ஒரு பகுதியை சன் டிவி, வெட்டி விட்டதாக ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், “விஜய் அண்ணாவைப் பற்றி நான் பேசியதிலிருந்து, சன் டிவி ஒரு பகுதியை வெட்டியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த விஜய் ரசிகர்கள் நீங்கள் என்ன பேசினீர்கள். அதை வீடியோவாக பதிவிடுங்கள் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.Loading...

ரசிகர்களின் கோரிக்கையை அடுத்து தான் பேசியதை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் டேனியல் பாலாஜி. அதில் கூறப்பட்டிருப்பதாவது, “ ஒரு ரசிகராக, அரசியல் இல்லாமல் என் உரையில் நான் சொன்னது. விஜய் அண்ணா சக நடிகருக்கு ஒரு பாதுகாவலர். எனக்கு ஒரு நல்ல நண்பர். பெற்றோருக்கு ஒரு நல்ல மகன். அதேபோல் அவரது இதயத்தில் வாழும் ரசிகர்களுக்கு அவர் ஒரு நல்ல தலைவர். விரைவில் வருவார்” என்று கூறியுள்ளார்.வீடியோ பார்க்க: தமிழன் முதல் பிகில் வரை! தளபதி விஜய் பேசிய அரசியல்

First published: September 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...