Home /News /entertainment /

காதலரை கரம் பிடித்த பிகில் நடிகை ரெபா மோனிகா ஜான்!

காதலரை கரம் பிடித்த பிகில் நடிகை ரெபா மோனிகா ஜான்!

ரெபா மோனிகா ஜான்

ரெபா மோனிகா ஜான்

ரெபாவின் பிறந்தநாளில் மோதிரத்தை அணிவித்து ஜோமோன் ப்ரொபோஸ் செய்த படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.

    பிகில் பட நடிகை ரெபா மோனிகா ஜான், தனது காதலரை கரம் பிடித்துள்ளார்.

    தளபதி விஜய்யின் பிகில் படத்தில் அனிதாவாக நடித்து மிகவும் பிரபலமான நடிகை ரெபா மோனிகா ஜான் தனது காதலரை திருமணம் செய்துக் கொண்டார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ரெபாவின் பிறந்தநாளில் மோதிரத்தை அணிவித்து ஜோமோன் ப்ரொபோஸ் செய்த படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. தற்போது இந்த ஜோடி ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 9) காலை சர்ச்சில் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர். இந்தத் திருமணம் இருவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

    திருமணத்தின் போது ரெபா வெள்ளை நிற திருமண கவுன் அணிந்திருந்தார், ஜோமோன் ஒரு ஸ்டைலான கருப்பு பிளேஸரை அணிந்திருந்தார். அவர்களின் திருமண படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி, இளம் நடிகைக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றன.

    ராஜா சாருக்கு இது தெரியாதா? இளையராஜாவை விமர்சிக்கும் சின்மயி

    ஏ பிச்சுமணி இயக்கத்தில் ஜெய் நடித்த ஜருகண்டி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் ரெபா. இருப்பினும், அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த, பிகில் படத்தின் மூலம் திருப்புமுனையைப் பெற்றார். அதில் ஆசிட் வீச்சில் உயிர் பிழைத்த அனிதா வேடத்தில் ரெபா நடித்திருந்தார். அடுத்ததாக மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் 'எஃப்ஐஆர்' படத்தில் நடித்து முடித்துள்ளார் ரெபா.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    அடுத்த செய்தி