விஜய்க்கு ஸ்பெஷல் கிஃப்ட் கொடுத்து இம்ப்ரெஸ் செய்த ‘பிகில்’ நடிகை

பிகில் படப்பிடிப்பின் போது விஜய்க்கு ஸ்பெஷலான கிஃப்ட் கொடுத்து அசத்தியுள்ளார் நடிகை ஆதிரை சவுந்தரராஜன்.

விஜய்க்கு ஸ்பெஷல் கிஃப்ட் கொடுத்து இம்ப்ரெஸ் செய்த ‘பிகில்’ நடிகை
பிகில் பட நடிகை
  • Share this:
பிகில் படத்தில் விஜய்யின் கால்பந்து அணியில் மின்னொளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ஆதிரை சவுந்தரராஜன். கடந்த ஆண்டு பிகில் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் விஜய்க்கு வித்தியாசமான மறக்கமுடியாத கிஃப்ட் ஒன்றை கொடுத்து அசத்தியுள்ளார் ஆதிரை.

இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் ஆதிரை சவுந்தரராஜன், "பிகில் பட ஷூட்டிங்கின் போது எங்கள் அணியில் இருப்பவர்கள் அனைவரும் விஜய்க்கு பிறந்தநாள் பரிசளித்தார்கள். ஒருநாள் படப்பிடிப்பு முடிந்ததும் விஜய்யிடம் சென்று 2 நிமிடம் காத்திருங்கள். உங்களுக்காக ஒரு கிஃப்ட் வாங்கியிருக்கிறேன் என்றேன். அவர் வேண்டாம் என்று மறுத்து பின்னர் வாங்கிக் கொள்வதாக சம்மதித்தார்.

நான் வாங்கியிருந்த பிறந்தநாள் பரிசு சற்றே வித்தியாசமானது. ‘பிகில்’ படத்தில் இடம்பெறுவது போன்று மணிப்பூர் மற்றும் தமிழ்நாடு அணிகள் இருப்பது போல் கதாபாத்திரங்கள் பொம்மைகளாக இருந்தன. அதை நம் கைகளில் வைத்து விளையாடமுடியும். இந்த கேமில் எங்கள் அணியின் கோச் விஜய்யின் கேரக்டரையும் அவரது ஜெர்சி எண் மாறாமல் அப்படியே இணைத்திருந்தேன்.
இந்தப் பரிசைப் பார்த்த விஜய், உண்மையிலேயே பிகில் அணியைப் பார்ப்பதுபோல் உணர்வதாகக் கூறினார். அவரது பெட்ரூமில் இந்த கிஃப்டை வைத்திருப்பதாகவும் அடுத்த நாள் படப்பிடிப்பின் போது தெரிவித்தார். சில நேரங்களில் தான் வழங்கிய கிஃப்டில் கேம் விளையாடுவதாகவும் விஜய் சொன்னார்.

எனது பரிசுப் பொருளைப் பார்த்து திரையுலகின் உச்சநட்சத்திரமான விஜய் மறக்கமுடியாத பரிசுப் பொருள் என்று கூறியது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த ஆண்டு அவரது பிறந்தநாளை மிஸ் செய்தேன்” என்று ஆதிரை சவுந்தரராஜன் கூறினார்.
First published: August 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading