Home /News /entertainment /

கேள்விக்குறியாகும் லோ பட்ஜெட் படங்களின் நிலை.. திரை துறையினர் வேதனை!

கேள்விக்குறியாகும் லோ பட்ஜெட் படங்களின் நிலை.. திரை துறையினர் வேதனை!

லோ பட்ஜெட்  மூவிஸ்

லோ பட்ஜெட் மூவிஸ்

கடந்த ஐந்து மாதங்களில் வெளியான திரைப்படங்களில் 10க்கும் குறைவான படங்கள் மட்டுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கின்றன. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு சிறிய திரைப்படங்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது என திரை துறையினர் கூறியுள்ளனர். 

தமிழ் சினிமாவில் கடந்த ஐந்து மாதங்களில் பீஸ்ட், கே.ஜி.எஃப்-2, காத்துவாக்குல ரெண்டு காதல், டான், விக்ரம் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.  அதில் சுமார் 10 படங்கள் மட்டும் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள்.  மற்றவை மினிமம் அல்லது குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள்.

இந்த திரைப்படங்களில் குறிப்பிட்ட சில திரைப்படங்களுக்கு மட்டுமே ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்துள்ளனர். ஐங்கரன் உள்ளிட்ட மற்ற சில படங்கள் விமர்சனம் ரீதியில் வரவேற்பை பெற்ற நிலையிலும்,  ரசிகர்கள் திரையரங்கிற்கு வரவில்லை. அது தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

Vijay 67 : ஆயுத பூஜைக்கு வெளிவரும் விஜய் படம்!

இதுகுறித்து திரை வியாபாரத்தில் உள்ள  விநியோகஸ்தர் கார்த்திக் ரவிவர்மா கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் எடுத்துக் கொண்டால், விஜயின் பீஸ்ட் 110 கோடி, கே.ஜி.எஃப்-2 115 கோடி, காத்துவாக்குல ரெண்டு காதல் 33 கோடி, டான் 70 கோடி, விக்ரம் 175 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளததாக கூறுகிறார். இதை தவிர, வீட்ல விஷேசம் 8 கோடி, யானை 18 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது.
இந்தப் படங்களை தவிர 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு ரசிகர்கள் திரையரங்கிற்கு வரவில்லை.

அதன் காரணமாக கடந்த 5 மாதங்களில் வெளியான படங்களில்,   சுமார் 90% படங்களின் மொத்த வசூல் 2 கோடிக்கும் குறைவாகவே உள்ளன. ஒரு சில சிறிய படங்கள் வரவேற்பை பெற்றிருந்தாலும் ரசிகர்கள் வரவில்லை. கொரோனா காலகட்டத்திற்கு பிறகு  பெரும்பாலும் சிறிய பட்ஜெட் படங்களை ஓ.டி.டியில் பார்த்துகொள்ளலாம் என்ற மனநிலைக்கு ரசிகர்கள் வந்துவிட்டனர் என கார்த்திக் ரவிவர்மா கூறுகிறார்.

சந்திரமுகி 2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

அதேசமயம் ஓ.டி.டி நிறுவனங்களில் நிலையும் மோசமாக உள்ளன. அதில் வெளியாகும் பெரும்பாலான படங்களையும் குறைந்த அளவிலேயே ரசிகர்கள் பார்க்கின்றனர். இதனால் அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற நிறுவனங்களே சற்று யோசிக்க தொடங்கியுள்ளன. அதன் காரணமாக சிறிய படங்களை அவர்கள் வாங்க தயக்கம் காட்டுகின்றனர். இதனால் குறைந்த பட்ஜெட் படங்கள் நிலை கேள்விக்குறியாகி இருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

யஷ், விஜய், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன்,  கமல் ஆகியோர் படங்கள் நல்ல வசூல் செய்து விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் லாபம் கொடுத்த நிலையில், ஐங்கரன், செல்ஃபி ஆகிய படங்கள் தலா 1 கோடி, மன்மத லீலை, மாமனிதன், வாரியர் ஆகிய படங்கள் 2 கோடி ரூபாயும், D Block, தேஜாவு ஆகிய படங்கள் தலா 3 கோடியே 50 லட்சமும் வசூல் செய்துள்ளன. அதேபோல் விமர்சன ரீதியில் வெற்றியடைந்த சாய் பல்லவியின் கார்கி படம் 2 கோடியே 75 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது. மற்ற அனைத்து படங்களும் ஒரு கோடிக்கு கீழ் மட்டுமே வசூல் செய்துள்ளன.

அதிலும் சில படங்களின் மொத்த வசூலே 10 லட்சத்திற்குள் உள்ளன. இதனால் அந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் வேதனையில் உள்ளனர் என திரைத்துறையில் கூறுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sreeja
First published:

Tags: Kollywood, Kollywood movies, Tamil Cinema

அடுத்த செய்தி