தளபதி 65: பிக்பாஸ் கவின் பற்றி தீயாக பரவும் தகவல் - உண்மை என்ன?

கவின்

தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியிருக்கும் மற்றொரு மலையாள நடிகையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

  • Share this:
மாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். நேற்று இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. அதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

தற்காலிகமாக ‘தளபதி 65’ என்று அழைக்கப்படும் இந்தப் படத்தில் மலையாள நடிகை அபர்ணா தாஸ் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார். மேலும் முதல்முறையாக விடிவி கணேஷ் இந்தப் படத்தில் விஜய் உடன் இணைந்துள்ளார் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

அதேபோல் நேற்று நடைபெற்ற படபூஜையில் பிக்பாஸ் பிரபலமும் நடிகருமான கவின் பங்கேற்றதால் அவர் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் இந்தப் படத்தில் நெல்சனின் உதவியாளராகவே பணியாற்ற இருப்பதாகவும், நடிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே சிவகார்த்திகேயன் - நெல்சன் திலீப் குமார் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘டாக்டர்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கும் கவின் தான் ஹீரோவாக நடித்திருக்கும் ‘லிப்ட்’ படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கேம் சேஞ்சர் விருதைப் பெற்ற இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் ‘தளபதி 65’ படத்தில் பணியாற்றும் செய்தி நெட்டிசன்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: