Home /News /entertainment /

‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு பீச்சில் நடனமாடிய பிக்பாஸ் ஜூலி..

‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு பீச்சில் நடனமாடிய பிக்பாஸ் ஜூலி..

பிக்பாஸ் ஜூலி

பிக்பாஸ் ஜூலி

Pushpa Samantha Oo solriya Mama Song : புஷ்பா படத்தில் சமந்தா நடனமாடியுள்ள ‘ ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு ஜூலி நடனமாடியுள்ளார்.

    பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்ட ஜூலி மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடன நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.ஜூலிக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1 லட்சம் பின் தொடர்பாளர்கள் உள்ளனர்.

    ஜூலி அடிக்கடி தனது இன்ஸ்டாகிராமில் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி பதிவிடுவார்.சமீபத்தில் நடிகை ஜூலி கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்த தனது காதலன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.



    மேலும் 2.50 லட்சம் ரூபாய்க்கு வீட்டிற்கு தேவையான பொருட்களை தனது காதலனுக்கு வாங்கி கொடுத்ததாக ஜூலி தெரிவிந்திருந்தார். முதலில் தனது காதலனுடன் பேசுவதை ஜூலியே நிறுத்தியுள்ளார். இதனால் ஜூலியின் காதலன் அடிக்கடி ஜூலிக்கு போன் செய்து ’நீ இல்லாமல் வாழ முடியாது’ என்று அழுது புழம்பியுள்ளார்.இதனால் தன் காதலனை மிரட்டவே ஜூலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    also read : ‘96‘ ஜானுவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வைரல்..



    இதனையடுத்து ஜூலியின் காதலன் தாமாகவே முன்வந்து ஜூலி வாங்கி கொடுத்த தங்க நகை உள்ளிட்ட பொருட்களை போலீசார் முன்னிலையில் திருப்பியளித்துள்ளார்.விசாரணையில் ஜூலி தான் முதலில் காதலை துண்டித்துள்ளார் என்பது அம்பலமாகியது.

    also read : அழகூரில் பூத்தவளே! நடிகை நிதி அகர்வால் போட்டோஸ்..



     
     

     

     


    View this post on Instagram


     

     

     

     

    A post shared by MDP PhotoGraphy (@_mdp_photography)





    இந்நிலையில் தற்போது ஜூலி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். புஷ்பா படத்தில் சமந்தா நடனமாடியுள்ள ‘ ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு நடனமாடியுள்ளார். ஜூலியின் இந்த ரீல்ஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Bigg boss Julie

    அடுத்த செய்தி