ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸ் தர்ஷன் 'நாடு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது…

பிக் பாஸ் தர்ஷன் 'நாடு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது…

நாடு

நாடு

எங்கேயும் எப்போதும் படத்தின் இயக்குனர் சரவணன் இயக்கியுள்ள நாடு திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எங்கேயும் எப்போதும் படத்தின் இயக்குனர் சரவணன் இயக்கியுள்ள நாடு திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.

ஜெய், சர்வாணந்த், அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த எங்கேயும் எப்போதும் படத்தை எம்.சரவணன் என்பவர் இயக்கியிருந்தார். அந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. அதைத்தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் இவன் வேற மாதிரி என்ற ஆக்சன் திரைப்படத்தை சரவணன் இயக்கினார். அந்தப் படமும் வசூல் ரீதியில் வெற்றியடைந்தது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் பட்டியலில் சரவணன் இணைவார் என்று எதிர்பார்த்த நிலையில், சாலை விபத்தில் பலத்த காயமடைந்தார். இதன் காரணமாக ஐந்து ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதிலிருந்து குணமடைந்த சரவணன், திரிஷா நடிப்பில் ராங்கி என்ற திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்கியுள்ளார். அந்த திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் பிக் பாஸ் தர்ஷன் மற்றும் நடிகை மகிமா நம்பியார் நடிப்பில் நாடு என்ற திரைப்படத்தை அவர் இயக்கியுள்ளார். அந்த திரைப்படத்திற்கான முதல் பார்வை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

சிவாஜி, ரஜினிக்கு சில்வர் ஜுப்லி ஹிட் தந்த ஆப்கானிஸ்தான் காதர் கான்!

அந்த விழாவில் இயக்குனர் சரவணன்,  இசையமைப்பாளர் சத்யா, நடிகர்கள் தர்ஷன், மகிமா நம்பியார், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பேசிய இயக்குனர் சரவணன் "நான் பார்த்த உண்மை சம்பவத்தைதான் நாடு படத்தில் படமாக்கியுள்ளேன்" என கூறினார்.அதில் கலந்து கொண்ட பலரும் நாடு திரைப்படம் சிறப்பாக உருவாகி இருப்பதாகவும், விரைவில் திரைக்கு வர இருப்பதாகவும் கூறினர். மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் முதல் பார்வையையும் வெளியிட்டனர்.

Published by:Srilekha A
First published:

Tags: Kollywood, Tamil Cinema