‘இந்தியன் 2’ திரைப்படத்தில் கமலுடன் இணையும் தர்ஷன்!

‘இந்தியன் 2’ திரைப்படத்தில் கமலுடன் இணையும் தர்ஷன்!
இந்தியன் 2 | தர்ஷன்
  • News18
  • Last Updated: October 2, 2019, 12:48 PM IST
  • Share this:
‘இந்தியன் 2’ படத்தில் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், விவேக் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன் 2. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

ராஜமுந்திரி சிறைச்சாலையில் நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பு தளத்துக்கு வந்த பாலிவுட் நடிகர் அனில் கபூர் கமல்ஹாசனிடம் சில மணி நேரங்கள் பேசி விட்டுச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் இந்தியன் 2 படத்தில் நடிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.


இந்நிலையில் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட தர்ஷன் கமல்ஹாசனை சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்கான அழைப்பு என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படிக்க: சரவணா ஸ்டோர்ஸ் அதிபருக்கு நான் ஜோடியா? - ஹன்சிகா பதில்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு வெளியில் வந்ததும் ஒருசில படவாய்ப்புகளே வருகின்றன. அதிலும் வெளியாகும் படங்கள் மிகக் குறைவே. ஆனால் தர்ஷனுக்கு முதல்வாய்ப்பே கமல்ஹாசனுடன் நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.வீடியோ பார்க்க: நடிப்புச் சக்ரவர்த்தி சிவாஜிகணேசன்!

First published: October 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்