”என்ன தப்பா நினைச்சிடாதடா...” கவினிடம் கண்கலங்கும் சாண்டி...!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 89-வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

”என்ன தப்பா நினைச்சிடாதடா...” கவினிடம் கண்கலங்கும் சாண்டி...!
கவின் மற்றும் சாண்டி
  • News18
  • Last Updated: September 20, 2019, 4:05 PM IST
  • Share this:
பிக்பாஸ் வீட்டில் கவினிடம் சாண்டி கண்கலங்கி பேசும் வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

கடந்த இரண்டு சீசன்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகியதை அடுத்து கடந்த ஜூன் மாதம் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியது.

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டதை எட்டியுள்ள நிலையில் ஷெரின், தர்ஷன், சேரன், முகேன், கவின், லாஸ்லியா, சாண்டி ஆகிய 7  போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.


Also read... பிகில் படத்தின் டீசர் குறித்து வெளியான அப்டேட்!

இவர்களில் சேரன், ஷெரின், கவின், லாஸ்லியா ஆகிய 4 பேர் எவிக்‌ஷன் பட்டியலில் உள்ளனர். இவர்களில் ஒருவர் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் இந்த வார இறுதியில் வெளியேற்றப்படுவார்.

இந்நிலையில், இந்த வாரம் முழுவதும் நடைபெறும் டாஸ்குகளில் யார் அதிக மதிபெண்கள் எடுக்கிறார்களோ அந்த போட்டியாளர் நேரடியா இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading...

Also read... எப்படி இருக்கிறது சூர்யாவின் காப்பான்? ட்விட்டர் விமர்சனம்

இதனால் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் தீவிரமாக போட்டியிட்டுக்கொண்டிருக்கும் சூழலில் வீட்டில் உள்ள கவின் சாண்டி இடையே கடந்த 3 நாட்களாக சிறுசிறு மனக் கசப்புகள் ஏற்படுகிறது.

இந்நிலையில், 89-வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது, அதில் கவினிடம் தனியா அமர்ந்து பேசும் சாண்டி என்னை மட்டும் தப்பா நெனச்சுடாதடா என கண் கலங்கி கூறுகிறார்.Also see...

First published: September 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...