• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிரபல இயக்குனர் படத்தில் கமிட்டான பிக் பாஸ் பிரபலம்!

பிரபல இயக்குனர் படத்தில் கமிட்டான பிக் பாஸ் பிரபலம்!

பிரபல இயக்குனர் படத்தில் பிக் பாஸ் பிரபலம்

பிரபல இயக்குனர் படத்தில் பிக் பாஸ் பிரபலம்

இப்படத்தை இயக்குனர் வசந்தபாலன் தனது பள்ளிப்பருவ நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறார்.

  • Share this:
    இயக்குநர் வசந்த பாலன் இயக்கும் புதிய திரைப்படத்தில் பிக்பாஸில் பங்கேற்ற சுரேஷ் சக்கரவர்த்தி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிக்பாஸ் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான சுரேஷ் சக்கரவர்த்திக்கு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நீண்ட நெடிய அனுபவம் இருக்கிறது. நிகழ்ச்சி தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்த அவர், கடந்த சீசன் பிக்பாஸில் பங்கேற்று பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்தார். அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. துர்திஷ்டவஷமாக, 35 நாட்கள் மட்டுமே பிக்பாஸ் ஷோவில் இருந்தார். கேப்ரியல்லா, இவரை ’தாத்தா’என்ற பட்டப்பெயர் சூட்டி அன்போடு அழைத்து வந்தார்.

    பிக்பாஸில் இருந்து வெளியே வந்தபிறகு அவருக்கு மீண்டும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் மவுசு கூடியது. பல இடங்களில் இருந்து திரைப்படம் மற்றும் சீரியல்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. விஜய் டீவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற டான்ஸ் ஷோவில், வனிதாவும், இவரும் சேர்ந்து பங்கேற்றனர். ஆனால், ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பாதியில் வெளியேறினார். இது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. துணை இல்லாமல் இருந்த சுரேஷ் சக்கரவர்த்தி, கெஸ்ட் பர்ஃபாமென்சுகளில் பங்கேற்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், அவர் இயக்குநர் வசந்தபாலன் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சுரேஷ் சக்கரவர்த்தி ஏற்கனவே இயக்குநர் பாலச்சந்தர் உள்ளிட்டோரின் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் வனிதா விஜயக்குமாரும் நடிக்கிறார். இயக்குநர் வசந்தபாலன் பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கரிடம் இணை இயக்குநராக பணியாற்றி வந்தார். பின்னர், ஆல்பம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், ’அங்காடித் தெரு’ படத்தின் மூலம் பிரபல இயக்குநர் என்ற அந்தஸ்தைப் பெற்றார். அந்தப் படம் பட்டித்தொட்டியெல்லாம் ஹிட்டானது.

    இதனையடுத்து அரவான், காவியத் தலைவன் ஆகிய படங்களை இயக்கிய வசந்தபாலன், சுமார் 5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை பட பிரபலம் துஷாரா விஜயன் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை இயக்குனர் வசந்தபாலன் தனது பள்ளிப்பருவ நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறார்.

    சுரேஷ் சக்கரவர்த்தி


    சுரேஷ் சக்கரவர்த்தியைப்போல் ஜெ.எஸ்.கே. சதீஷ்குமார், ஷா ரா, மற்றும் நடிகர் அர்ஜுன் சிதம்பரமும், இந்தப் படத்தில் நடிக்க உள்ளனர். நடிகர் அர்ஜுன் சிதம்பரம், போனி கபூரின் தயாரிப்பில், அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து பிரபலமானவர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: