ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இலங்கை... தமிழ்... ரொம்ப டர்ட்டி ஆக்க பாக்குறீங்க - ஜனனியிடம் விளக்கமளிக்கும் விக்ரமன்!

இலங்கை... தமிழ்... ரொம்ப டர்ட்டி ஆக்க பாக்குறீங்க - ஜனனியிடம் விளக்கமளிக்கும் விக்ரமன்!

பிக்பாஸ்

பிக்பாஸ்

இந்த வார கேப்டனாக மைனா நந்தினி வெற்றிபெற்ற நிலையில், இந்த வார எலிமினேஷனுக்காக தனலட்சுமி, அசீம், கதிரவன், மணிகண்டன், அமுதவாணன், கதிர் மற்றும் ராபர்ட் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த மாதம் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

முதல் வார இறுதியில் எலிமினேஷன் இல்லாத நிலையில் இரண்டாவது வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினர். முதலாவதாக ஜிபி முத்து நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்த டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து அடுத்த அடுத்த வாரங்களில் தொடர்ந்து அசல், ஷெரினா, மகேஸ்வரி மற்றும் நிவாஷினி ஆகியோர் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் மீதம் உள்ள 15 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடந்து ஒளிபரப்பபடுகிறது. இந்த வார கேப்டனாக மைனா நந்தினி வெற்றிபெற்ற நிலையில், இந்த வார எலிமினேஷனுக்காக தனலட்சுமி, அசீம், கதிரவன், மணிகண்டன், அமுதவாணன், கதிர் மற்றும் ராபர்ட் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு இந்த வாரத்திற்கான டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் பிக்பாஸ் வீடு இந்த வாரம் பிக்பாஸ் நீதிமன்றமாக மாறியுள்ளது. போட்டியார்கள் ஒவ்வொருவராக வந்து கேமெரா முன்பு தங்களது புகார்களை தெரிவித்து யார் தங்களுக்காக வாதாட வேண்டும் என்பதையும் தெரிவிக்குமாறு கூறப்பட்டது.

Also read... ஷூட்டிங்கே தொடங்கல.. அதுக்குள்ள இத்தனை கோடி வியாபாரமா? தளபதி67 குறித்து சூப்பர் அப்டேட்

முன்னதாக வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் விக்ரமன் மீது ஜனனி வழக்கு தொடுத்துள்ளார். அதில் தான் பேசும் தமிழ் குறித்து விக்ரமன் கமெண்ட் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் விக்ரமன் மொழி குறித்து பேசினேனே தவிற தமிழ் என்று குறிப்பிடவில்லை என்று தெரிவிக்கிறார். இதனை தொடர்ந்து ஜனனியின் வக்கீலாக அசீமும் விக்ரமனின் வக்கீலாக குயின்சியும் நேரடியாக மோதிக்கொள்கின்றனர்.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் 46-வது நாளிற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் விக்ரமனிடன் ஜனனி ரொம்ப சீரியசா எடுத்துகாதீங்க இது கேம் என்று கூற, அத இப்படி மாத்தி.. இலங்கை அது இதுனு ரொம்ப டர்ட்டி ஆக்க பாக்குறீங்க என்று விக்ரமன் கூறுகிறார். அதற்கு ஜனனி, நாங்க இலங்கையலாம் கொண்டுவரமாட்டோம் என்று கூற.. விக்ரமன் நான் உறுதியா சொல்றேன் அப்படி சொல்லவே இல்லை என்றும் டாஸ்க்கில் எல்லாருக்கும் செந்தமிழ் பேசுவதில் சிரமமாக இருந்தது.. எனக்கும் சிரமமாதான் இருந்தது என்றும் அவர் தன்னுடைய விளக்கத்தை ஜனனியிடம் கூறும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Bigg Boss Tamil 6