மீண்டும் ஒன்று சேர்ந்த யாஷிகா - மஹத் ஜோடி!

பிக்பாஸ் புகழ் மஹத் மற்றும் யாஷிகா புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்கவுள்ளனர்.

மீண்டும் ஒன்று சேர்ந்த யாஷிகா - மஹத் ஜோடி!
மஹத் - யாஷிகா
  • News18
  • Last Updated: November 28, 2018, 1:15 PM IST
  • Share this:
பிக்பாஸ் புகழ் மஹத் மற்றும் யாஷிகா புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்கவுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 2-வில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் அதிகம் பேசப்பட்டவர்கள் நடிகை ஐஸ்வர்யா, மஹத், யாஷிகா தான். நிகழ்ச்சியின் போது தனக்குள் ஏற்பட்ட காதலை மஹத்திடம் யாஷிகா வெளிப்படையாக தெரிவித்திருந்தார். அதனால் நிகழ்ச்சியின் பேசுபொருளாக இருவரும் மாறியிருந்தனர். நிகழ்ச்சி முடிவடைந்ததற்கு பின்பும் இவர்களுக்கான ரசிகர் பட்டாளம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர்கள் மகேஷ் - வெங்கடேஷ் இணைந்து இயக்க உள்ளனர். படத்துக்கான பூஜை இன்று போடப்பட்டது.


படத்தின் படப்பிடிப்பை ஜனவரி மாதம் துவங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ், கன்னடம் ஆகிய இரண்டு மொழிகளில் இந்தப் படம் தயாராகவுள்ளது. மேலும் ஹாரர் ஜானரில் இந்தப் படம் உருவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ராமதாஸ், மா.கா.பா. ஆனந்த் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

Loading...

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் சிம்புவுடன் நடித்து வரும் மஹத், நடிகை ஐஸ்வர்யாவுடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பிரபுராம் இயக்க இருக்கிறார்.

ஈழத்திற்காக கடலில் நின்று சபதம் செய்த வைகோ - வீடியோ

First published: November 28, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...