Home /News /entertainment /

போட்டியாளர்கள் மக்களிடம் பேச கடைசி சான்ஸ் தரும் பிக் பாஸ்!

போட்டியாளர்கள் மக்களிடம் பேச கடைசி சான்ஸ் தரும் பிக் பாஸ்!

பிக் பாஸ் தமிழ் 5

பிக் பாஸ் தமிழ் 5

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பிக் பாஸிடமிருந்து அறிவிப்பு ஒன்று வந்திருக்கிறது. அதனை ராஜு படிக்கிறார்.

    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் தனிப்பட்ட காரணங்களுக்காக நமீதா மாரிமுத்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் வாரத்தில் குறைந்த வாக்குகள் பெற்றதால் நாடியா வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து பிரபல யூடியூபரான அபிஷேக் ராஜா இரண்டாவது நபராக வெளியேற்றப்பட்டார். பின்னர் சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி, அபிநய், அக்‌ஷரா, வருண், வைல்ட் கார்டு எண்ட்ரியில் உள்ளே வந்த சஞ்சீவ் ஆகியோர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் தாமரை செல்வி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பிக் பாஸிடமிருந்து அறிவிப்பு ஒன்று வந்திருக்கிறது. அதனை ராஜு படிக்கிறார். “கோல்டன் மைக் கடிதம். இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக யாரை தேர்வு செய்யப் போகிறார்கள் என்பதன் இறுதி முடிவை எடுக்கப்போகும் மிக முக்கிய வாரம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் மக்களுடன் கடைசியாக ஒருமுறை நீங்கள் பேசலாம்” என்ற அறிவிப்பு தான் அது.



    அப்போது பேசும் பாவனி, ‘எனக்கு தெரிஞ்சு நான் ரொம்ப உண்மையா விளையாண்டிருக்கேன்’ என்கிறார். ‘எதோ ஒரு இடத்துல மக்கள ஏமாத்திட்டோமோன்னு தோணுது. அதுக்காக அவங்கக் கிட்ட பெரிய மன்னிப்பு கேக்கணும்’ என்கிறார் நிரூப்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil 5

    அடுத்த செய்தி