பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது வெற்றிகரமாக 72 நாட்களை நிறைவு செய்துள்ளது. வித்தியாசமாக பிக் பாஸ் அனைவரையுமே வெளியேற்றப் பட்டியலுக்கு நாமினேசன் செய்துள்ளார். மேலும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டாஸ்க்காக வைத்து, அதில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷன் பட்டியலில் இருந்து காப்பாற்றப் படுவார்கள் என்று நேற்று முதல் பரபரப்பான டாஸ்க்குகள் நடைபெற்று வருகின்றன.
அதன் படி, நேற்று போட்டியாளர்கள் ரேங்க்கிங் டாஸ்க் நடைபெற்றது. ஒன்று முதல் பத்து வரை தங்களை ரேங்கிங் அடிப்படையில் வரிசைப்படுத்திக் கொள்ள பிக் பாஸ் டாஸ்க் வைத்து. பல கட்ட கடுமையான விவாதங்களுக்குப் பிறகு, அசராமல் முதல் இடத்தில் நின்று, வெற்றி பெற்ற சிபிக்கு எலிமினேஷன் பட்டியலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
இன்றைய டாஸ்க்காக அனைத்து போட்டியாளர்களும் ஒரு பஸ்ஸில் நிற்க வேண்டும். அவர்கள் அங்கு இருக்க முடியாதவாறு பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்படும். போட்டியாளர்கள் மேல் தண்ணீர் ஊற்றுவது முதல், பஸ்ஸில் இருந்தவர்கள் முகம் சுளித்து மூக்கைப் பொத்திக் கொள்வது வரை பல புரோமோக்களில் பார்த்தோம். மேலும், இரண்டாவது புரோமோவில் பிரியங்கா மீண்டும் தாமரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு சளைக்காத தாமரையும் சரிக்கு சரி பதில் அளித்தார்.
தற்போது வெளியான மூன்றாவது புரோமோவில், இப்போது நிரூப்பை பஸ்ஸிலிருந்து வெளிய அனுப்பத் திட்டம் போட்டுள்ளார் பிரியங்கா. நேற்று ரேங்கிங் டாஸ்க்கில் நிரூப் பயந்தாங்கொள்ளி, தொடைநடுங்கி, தைரியம் இல்லாதவன் என்றெல்லாம் சிபி கூறினார். அமீர் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்தவுடனே, நிரூப் மீது நெகட்டிவ் பேச்சு தான் இருக்கிறது என்று கூறியது முதலே, அதிரடி போட்டியாளராக இருந்து நிரூப் அமைதிப் புறாவாக மாறினார். எதற்கும் சண்டை போடாமல், பதில் சொல்லாமல் அமைதியாகவே இருந்து வந்தார். நேற்று தான் சிபியிடம் முதல் இடத்திற்காக சண்டை போட்டார். இரண்டாவது டாஸ்க்கிலும், பஸ்ஸில் இருந்து வெளியேறாமல் இடம் பெற்றுள்ள நிரூப்பை வெளியேற்ற பிரியங்கா திட்டமிட்டு, அவருடைய நம்பிக்கையை குறைக்கும்படி பேசியுள்ளார்.
என்ன பத்தி நிறையே நெகட்டிவ்வா சொன்னாங்க, அதனால எனக்கு ஒரு சின்ன பயம் இருக்கு என்று நிரூப் கூறினார். ஆனால், பிரியங்கா விடாப்பிடியாக நான் இருக்கணும், நீங்க நாமினேட் ஆகிக்கோ என்று கூறினார்.தொடர்ந்து, நான் இறங்க முடியாது, யார் வேணா என்ன வேணா செய்து கொள்ளுங்கள் என்று தெரிவிக்கிறார் பிரியங்கா.
ஆனால், யாருமே பஸ்ஸில் இருந்து வெளியேறாத நிலையில், மீண்டும் நிரூப்பை டார்கெட் செய்து, உன்னால விளையாட முடியுமா பயந்துட்டேன்னு தான சொன்ன, என்று கேட்டு, இப்படி பயந்தவன் பிக்பாஸ்லையே இருக்கக் கூடாது, வெளிய போ என்று அதிரடியாக பேசினார். பயம் என்ற வார்த்தையை வைத்து நிரூப் மீண்டும் கார்னர் செய்யப்படுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
#Day72 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/QAx1zK5UVS
— Vijay Television (@vijaytelevision) December 14, 2021
மேலும், இந்த ப்ரோமோவின் படி, ராஜு மற்றும் சஞ்சீவ் டாஸ்க்கில் இருந்து வெளியேறிவிட்டதாகத் தெரிகிறது. பஸ்ஸுக்குள் தாமரை, நிரூப், அபினை, பிரியங்கா, வருண் மற்றும் அமீர் ஆகியோர் மட்டுமே இருப்பதாக தெரிகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bigg Boss Tamil 5