• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • டாஸ்க்கிற்காக மொட்டை அடிக்க சொல்லும் அபினய் - கடுப்பாகும் நிரூப்!

டாஸ்க்கிற்காக மொட்டை அடிக்க சொல்லும் அபினய் - கடுப்பாகும் நிரூப்!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ப்ரோமோ

இந்த வாரத்திற்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்காக ’உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி’ பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் தற்போது 12 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சி தற்போது 43 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று இந்த வாரம் ‘நீர்’ ஆற்றலின் வாரம் என்பதால் வருணிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மற்ற ஆளுமைகளுக்கு கிடைக்காத பல சலுகைகள் வருணிற்கு இந்த வாரத்தில் கிடைத்துள்ளது. அதன்படி பிக் பாஸ் வீட்டின் நீர்க்கட்டுப்பாடு முழுக்க அவருக்கு கிடைத்தது. எனவே வருண் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் நீரை நிறுத்த முடியும். சக ஹவுஸ் மேட்ஸிற்கு தேவைப்பட்டால் வெளியே இருக்கும் பைப்பின் மூலம் பக்கெட்டில் தண்ணீர் பிடித்து எடுத்து வர வேண்டுமாம். மேலும் தினமும் பல் விளக்கி விட்டு வருணிடம் காண்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

  இதனை தொடர்ந்து ‘கலக்கப்போவது யாரு?’ என்கிற தலைப்பில் இந்த வார தலைவருக்கான போட்டி நடந்தது. பிரியங்கா, சிபி, ஐக்கி, நிரூப் ஆகியோர் இந்த போட்டியில் பங்கேற்ற நிலையில் இவர்களுக்கு பாதி அளவு தண்ணீர் இருக்கும் கண்ணாடி ஜாடி வழங்கப்பட்டது. மற்றவர்கள் ‘யார் தலைவராகக்கூடாது’ என்று ஒருவர் நினைக்கிறாரோ, அவரின் குடுவையின் நீரில் சாயத்தை ஊற்ற வேண்டும். அப்படி ஊற்றாதவாறு போட்டியாளர் தடுக்கலாம். தன்னுடைய தனித்தன்மை, குணாதிசயம் மற்றும் சாயத்தை ஏன் அடுத்தவருக்கு ஊற்ற வேண்டும்? போன்றவற்றை விளக்கி தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம். யாருடைய குடுவையில் குறைந்த சாயம் இருக்கிறதோ அவரே வெற்றியாளர் என பிக் பாஸ் அறிவித்தார்.

  இந்த போட்டியில் வழக்கம் போல நிரூப் மற்றும் பிரியங்கா மாறி மாறி சண்டை போட்டு கொண்டனர். மேலும் ஐக்கி, மீண்டும் பிரியங்காவை ஜால்ரா என கூறியதால் பிரச்னை ஏற்பட்டது. இறுதியாக இந்த போட்டியில் பிரியங்கா வெற்றி பெற்று வீட்டின் தலைவரானார். பின்னர் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. இதில் ஒரு ஸ்டாண்ட் அமைத்து போட்டியாளர்களின் புகைப்படங்கள் ஒட்டி வைக்கப்பட்டது. நாமினேட் செய்ய விரும்பும் போட்டியாளரின் புகைப்படத்தில் ஸ்பிரே அடிக்குமாறு கூறப்படுகிறது. அதன்படி ஐக்கி, அக்ஷ்ரா, நிரூப், சிபி, அபினய், இமான், தாமரை, இசைவாணி, பாவ்னி ஆகிய 9 பேர் இடம் பெற்றுள்ளனர்.

  இந்த நிலையில் இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்காக ’உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி’ டாஸ்க் வழங்கப்படுவது இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இருந்தது. அதில், போட்டியாளர்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு, டீம் ஏ கண்ணாடியாக மாறி, டீம் பி-யினரை பிரதிபலிக்க வேண்டும் என பிக் பாஸ் அறிவிக்கிறார். மேலும் சிபி- அக்‌ஷராவின் கண்ணாடியாகவும், இசைவாணி - இமான் அண்ணாச்சியாகவும் மாற வேண்டும் எனவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் ஒருவரை ஒருவர் வெறுக்கும் நபர்களை பிக் பாஸ் ஜோடி சேர்த்துள்ளது தெளிவாக தெரிகிறது.  அதன்படி பாவ்னி - ராஜு , பிரியங்கா - தாமரை, ஐக்கி - வருண், நிரூப் - அபினய் என பிரிந்துள்ளது ப்ரோமோவில் தெரிகிறது. மேலும் ப்ரோமோவில் முடிவில் அக்ஷ்ரா அழுவதால் சிபி - அக்ஷ்ரா இடையே பிரச்னை ஏற்படுவது தெரிகிறது. இதனை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், அபினய் - நிரூப் இடையே பிரச்னை ஏற்படுகிறது. அதில் அபினய் , நிரூப் முடியை வெட்ட சொல்வது போல தெரிகிறது. இதனால் நிரூப் கடுப்பாகி நீ பொய்யாக நடிக்கிறாய் என்கிறார். அதற்கு அபினய், அப்படி சொல்லாதே என கூறுகிறார். இறுதியாக அபினய், நிரூப்பை மொட்டை அடிக்க வைக்க போகிறேன் என கூறும் காட்சிகள் உள்ளது. இதனால் இன்று பிரச்னை ஏற்படும் என தெளிவாக தெரிகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Shalini C
  First published: