• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிரியங்காவை நாமினேட் செய்த ராஜு... பிக் பாஸ் ப்ரோமோ

பிரியங்காவை நாமினேட் செய்த ராஜு... பிக் பாஸ் ப்ரோமோ

பிரியங்கா

பிரியங்கா

போட்டியாளர்கள், பாவனி, இசை, சின்னப்பொண்ணு உள்ளிட்டோரை நாமினேட் செய்கின்றனர்.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு நாடியா சங் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து தற்போது 16 போட்டியாளர் உள்ளனர். இதைத் தொடர்ந்து தற்போதைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைப்பெறுகிறது.



    அதில் போட்டியாளர்கள், பாவனி, இசை, சின்னப்பொண்ணு உள்ளிட்டோரை நாமினேட் செய்கின்றனர். கடைசியாக கன்பெஷன் ரூமுக்குள் இருக்கும் ராஜு, சின்னப்பொண்ணுவை நாமினேட் செய்து விட்டு, கதவை திறந்து பிரியங்காவின் முழு பெயரை கேட்கிறார். வெளியில் இருப்பவர்கள் சிரிக்கிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: