பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த புதிய போட்டியாளர்.. இனி அதிரடி ஆட்டம் தொடங்குமா?

பிக்பாஸ் வீட்டுக்குள் 17-வது போட்டியாளராக விஜே அர்ச்சனா என்ட்ரி கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த புதிய போட்டியாளர்.. இனி அதிரடி ஆட்டம் தொடங்குமா?
பிக்பாஸ் 4
  • Share this:
கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் ரேகா, சுரேஷ், ரியோ, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், சனம் ஷெட்டி உள்ளிட்ட 16 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இம்முறை விஜே அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்வார் என்று ஆரம்பத்திலிருந்தே தகவல் வெளியாகி வந்த நிலையில் தற்போது 17-வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறார் விஜே அர்ச்சனா. அவரை சக போட்டியாளர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பதை புரமோ வீடியோவாக வெளியிட்டுள்ளது நிகழ்ச்சிக்குழு.

நேற்று ஆட்டம், பாட்டம் என களைகட்டிய பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா வருகைக்குப் பின்னர் அதிரடி ஆட்டம் ஆரம்பமாகுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம். சனம், ஷிவானி, சம்யுக்தா, ரேகா, ரம்யா பாண்டியன், கேப்ரில்லா, ஆஜித் ஆகியோர் இந்த வாரம் வெளியேற்றப்படுவோர் பட்டியலில் இடம்பிடித்தனர்.

இதில் ஆஜித், எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் பெற்றிருப்பதால், மீதமிருப்பவர்களில் ஒருவர் இந்த வாரம் வெளியற்றப்படுவார். அவர் யார் என்பதை தெரிந்து கொள்ள பார்வையாளர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.


இந்த முறை வெளியேற்றப்படுவோர் பட்டியலில் இருந்து சனம் ஷெட்டியை மக்கள் காப்பாற்றினால், அடுத்த வாரம் அவரை சக போட்டியாளர்கள் நாமினேட் செய்ய முடியாது. ஏனெனில் நேற்று பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் ஒன்றில் பாடகர் வேல்முருகன் மற்றும் சனம் ஷெட்டி ஜோடி சேர்ந்து வெற்றி பெற்றுள்ளனர்.100 நாட்கள் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது முதல் 10 நாட்களைக் கடந்திருக்கிறது. மீதமிருக்கக் கூடிய நாட்களை எதிர்நோக்கி போட்டியாளர்கள் காத்திருக்கும் நிலையில் என்னென்ன திருப்பங்கள் ஏற்படப்போகிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம் 
First published: October 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading