பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு யாஷிகா - மஹத் கொடுக்கும் சர்ப்ரைஸ் இதுதான்!

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு யாஷிகா - மஹத் கொடுக்கும் சர்ப்ரைஸ் இதுதான்!
பிக்பாஸ்
  • News18
  • Last Updated: September 24, 2019, 3:56 PM IST
  • Share this:
பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட யாஷிகா மற்றும் மஹத் இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.

பிக்பாஸ் தமிழ் 3-வது சீசன் நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த முறை டைட்டிலை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.

நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது 6 பேர் போட்டியாளர்களாக உள்ளனர். இதில் முகென் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியிருப்பதால் மீதமுள்ள 5 பேரும் எவிக்‌ஷனுக்காக நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சிக்கான புரமோ வீடியோக்களை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டிருந்தது. அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட யாஷிகா - மஹத் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருப்பது தெரிய வந்தது. இருவரையும் பார்த்த ஹவுஸ்மேட்ஸ் மகிழ்ச்சியடைந்தனர்.

தற்போது இருவரும் உள்ளே சென்றதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. அதன்படி இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியில் மஹத் - யாஷிகா இணைந்து நடித்த இவன் தான் உத்தமன் படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக நடிகர் மஹத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை மஃவேன் இயக்கியுள்ளார். தமன் இசையமைக்கிறார். இது ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.வெளி உலகத் தொடர்பின்றி இருக்கும் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இது சர்ப்ரைஸாக இருக்கும் எனபதில் ஐயமில்லை.

வீடியோ பார்க்க: டிக் டாக் மோகத்தால் தோழியுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்

First published: September 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading