அந்த 5 பேரும் மோசமா விளையாடுறாங்க... பிக்பாஸ் வீட்டில் வனிதா ஆவேசம்!

அந்த 5 பேரும் மோசமா விளையாடுறாங்க... பிக்பாஸ் வீட்டில் வனிதா ஆவேசம்!
வனிதா விஜயகுமார்
  • News18
  • Last Updated: September 9, 2019, 4:51 PM IST
  • Share this:
பிக்பாஸ் வீட்டில் இந்தவாரம் வெளியேற்றப்படுவோருக்கான நாமினேஷன் நடந்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வார திங்கள் கிழமையும் அந்த வாரத்தில் வெளியேற்றப்படுவோருக்கான நாமினேஷன் நடைபெறும். அதன்படி இந்தவாரம் நடைபெற்ற நாமினேஷனில் தர்ஷன், சாண்டி, முகென் ஆகியோர் வனிதாவை நாமினேட் செய்துள்ளனர்.

அதற்கான புரமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில், தர்ஷனை வனிதா நாமினேட் செய்துள்ளார். இதையடுத்து வனிதா பேசுகையில், இனிவரும் காலங்களில் தர்ஷன் நாமினேட் பட்டியலில் வருவாரா என்பதே சந்தேகம் தான். அதனால் தர்ஷனை நாமினேட் செய்வதாக கூறுகிறார்.


மேலும் அந்த 5 பேரும் மிகவும் மோசமாக விளையாடுவதாக அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமுடியாது என்றும் கூறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டிலிருக்கும் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் வனிதாவை நாமினேட் செய்திருப்பதால் வார இறுதியில் அவர் வெளியேற்றப்படவும் வாய்ப்புகள் அதிகம்.

முன்னதாக நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் சேரன் வெளியேறும் போது கண்ணீர் விட்ட வனிதா, இந்த விளையாட்டு எதை நோக்கிப் போகிறது. எனக்கு இந்த கேம் மீதான நம்பிக்கை எனக்கு சுத்தமாக போய்விட்டது. ஒருவர் நியாயமாக இருந்து டாஸ்க் எல்லாம் சரியாக செய்து, உண்மையாக இருந்தால் அவர் வெளியேற்றப்படுவாரா?இந்தமாதிரி வாக்களிக்கும் மக்களிடம் நான் விளையாடத் தயாராக இல்லை. எங்க எல்லாரையும் வெளிய அனுப்பிடுங்க” என்று தனது ஆதங்கத்தை பிக்பாஸிடம் முன் வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தவாரம் பிக்பாஸ் வீட்டின் தலைவராக லாஸ்லியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

பார்க்க: ரம்யா பாண்டியனின் கேன்டிட் போட்டோஸை வெளியிட்ட புகைப்பட கலைஞர்!Video: CINEMA ROUNDUP | மீண்டும் கைகோர்க்கும் சூர்யா - கெளதம் மேனன்

First published: September 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading