மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ - கேள்வி எழுப்பும் ரசிகர்களுக்கும் பதிலடி!

Web Desk | news18
Updated: August 6, 2019, 7:48 PM IST
மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ - கேள்வி எழுப்பும் ரசிகர்களுக்கும் பதிலடி!
மீராமிதுன்
Web Desk | news18
Updated: August 6, 2019, 7:48 PM IST
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட மீராமிதுன் தான் நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் 16-வது போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் மீரா மிதுன். மாடலிங் துறையில் மோசடி செய்ததாக இவர் மீது காவல்துறையில் புகார்கள் உள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டையும் பரபரப்பாகவே வைத்திருந்தார். மேலும் பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டு வந்தார்.

ஒரு டாஸ்க்கின் போது சேரன் தன்னை தவறாக தொட்டார் என்று இவர் வைத்த குற்றச்சாட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்போது சேரன் உடைந்து கண்ணீர்வடித்தார். இதைக் கண்ட பிக்பாஸ் பார்வையாளர்கள் அவருக்கு எதிராக வாக்களித்து வெளியேற்றினர். வெளியேறும்போது கூட அவர் சேரன் மீது பழிசுமத்தினார்.


இந்நிலையில் 35 நாட்களுக்கு பிறகு மீண்டும் தான் தவறவிட்ட வாழ்க்கை கிடைத்திருப்பதாக குறிப்பிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.

அந்த வீடியோவைப் பார்த்தவர்கள் சேரன் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்துள்ள மீரா மிதுன், இது லத்தீன் நடனம். இந்த நடனத்தில் ஒரு ஆண் என்னைத் தொடுவதால் என்னை அனைத்து ஆண்களும் தொடலாம் என்றில்லை. லத்தின் நடனமாடுபவர்களுக்கு பெண்கள் மீது மரியாதை உண்டு.

படிக்க: விமர்சகர்களின் பாராட்டு மழையில் நேர்கொண்ட பார்வை - விமர்சனம்

Loading...

சேரன் என்னிடம் வன்முறையாக நடந்து கொண்டார். அதனால் தான் நான் என்னை யாரும் இப்படி தொட்டதில்லை என்று கூறினேன். உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.
வீடியோ பார்க்க: சூர்யாவின் நீட் அரசியல்

First published: August 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...