லாஸ்லியாவுக்காக சேஃப்டிபின் கேட்ட கவின்- வச்சு செஞ்ச ஹவுஸ்மேட்ஸ்!

லாஸ்லியாவுக்காக சேஃப்டிபின் கேட்ட கவின்- வச்சு செஞ்ச ஹவுஸ்மேட்ஸ்!
பிக்பாஸ்
  • News18
  • Last Updated: August 29, 2019, 1:31 PM IST
  • Share this:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாகவே கவின் - லாஸ்லியா பேசுபொருளாகியுள்ளனர்.

65 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் போட்டியாளர்களாக உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீடு கிராமமாக மாறியுள்ளது. அதில் தெருக்கூத்து, பொம்மலாட்டம் போன்ற அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழர் கலைகளை கையிலெடுத்துள்ளனர் போட்டியாளர்கள்.

ஒவ்வொரு நாளும் புதுப்புது டாஸ்க்குகளை செய்து வரும் பிக்பாஸ் போட்டியாளர்கள் இன்று வில்லுப்பாட்டு டாஸ்க்கில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான புரமோ வீடியோக்களை நிகழ்ச்சிக் குழு வெளியிட்டுள்ளது. முதல் புரமோ வீடியோவில் கவின் , லாஸ்லியாவை கலாய்த்து சாண்டி வில்லுப்பாட்டு பாடிய நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் இரண்டாவது வீடியோவிலும், கவினை சக போட்டியாளர்கள் கிண்டலடிக்கின்றனர்.


சேஃப்டிபின் வேண்டும் என்று கவின் கேட்க, சேஃப்டிபின் லாஸ்லியாவுக்குத் தானே என்று சாண்டி உட்பட அனைவரும் கிண்டலடிக்க, கவினும், லாஸ்லியாவும் வெட்கத்தில் சிரிக்கின்றனர்.

நேற்றைய நிகழ்ச்சியில் லாஸ்லியாவிடம் கவின் தனது முன்னாள் காதல் குறித்து பேசியிருந்த நிலையில் உனக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே தான் என்றும் லாஸ்லியா கூறியிருந்தார். கவின் - லாஸ்லியா காதல் பிக்பாஸ் வீட்டுடன் முடிவடையுமா அல்லது திருமணத்தில் முடியுமா என்பதை அறிய பார்வையாளர்களிடையேயும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

படிக்க: அதிக திரையரங்குகளில் ‘பிகில்’ வெளியாகும் - அர்ச்சனா கல்பாத்தி அறிவிப்பால் பரபரப்பு!

Loading...வீடியோ பார்க்க: இணையத்தை கலக்கும் ரம்யா பாண்டியன் பேட்டி

First published: August 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...