சரவணன் வெளியேற்றம்...! கமல்ஹாசன் மவுனம் காப்பது ஏன்?

Bigg Boss Tamil 3 | சர்ச்சைக்குரிய தனது கருத்துக்காக மன்னிப்பு கோரிய பிறகும் சரவணன் வெளியேற்றப்பட்டதற்கு பல்வேறு காரணங்களும் பேசப்படுகின்றன.

news18
Updated: August 11, 2019, 12:11 PM IST
சரவணன் வெளியேற்றம்...! கமல்ஹாசன் மவுனம் காப்பது ஏன்?
கமல் | சரவணன்
news18
Updated: August 11, 2019, 12:11 PM IST
பிக்பாஸ் வீட்டில் சரவணன் திடீரென வெளியேற்றப்பட்டது குறித்து நேற்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுபற்றி அவர் வாய்திறக்காதது பார்வையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு வார இறுதியிலும், அகம் டிவி வழியாக பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களை சந்திக்கும் கமல்ஹாசன், இரண்டு வாரங்களுக்கு முன்பு சேரன் - மீரா மிதுன் இடையேயான பிரச்னையை சமரசம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென குறுக்கிட்டு பேசிய சரவணன், நானும் எனது கல்லூரி காலத்தில் பேருந்தில் பயணிக்கும் போது பெண்களை தவறாக இடித்துள்ளேன் என்று வெளிப்படையாக பேசினார். இது சமூகவலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது.

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழு சரவணனை பகிரங்கமாக மன்னிப்பு கோர வைத்தது. அவரும், “நான் என்னுடைய கருத்தை கமல்ஹாசன் முன்னிலையில் முழுமையாகப் பதிவு செய்ய முடியவில்லை. நான் செய்தது போல் யாரும் செய்ய வெண்டாம் என்றே கூற எண்ணினேன். நான் அப்படி பேசியது தவறுதான். அதற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.


மன்னிப்பு கோரிய பின்னரும் சில தினங்களுக்கு முன்பு திடீரென வெளியேற்றப்பட்டார் சரவணன். அப்போது கன்பெஷன் ரூமுக்கு அழைக்கப்பட்ட சரவணனிடம், “இந்நிகழ்ச்சி கோடிக்கணக்கானவர்களால் பார்க்கப்படுகிறது. பெண்களை தவறாக நடத்துவதை அனுமதிக்க முடியாது. அதனை நாங்கள் வனமியாக கண்டிக்கிறோம். மீரா மிதுன் - சேரன் பிரச்னையால் இதை கவனிக்கமுடியவில்லை. இதன் காரணமாக நீங்கள் வெளியேற்றப்படுகிறீர்கள்.

உங்களுக்கு இடதுபுறம் இருக்கும் கதவைத் திறந்து வெளியேறுங்கள்” என்று பிக்பாஸ் கூறினார். மறுவார்த்தையின்றி அங்கிருந்து சரவணன் வெளியேறினார்.

நடிகர் சரவணன்


Loading...

சரவணன் வெளியேற்றப்பட்டது குறித்து சகபோட்டியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்து அழத் தொடங்கினார்கள். சிலர் ஏன் என்ற கேள்வியையும் பிக்பாஸிடம் முன்வைத்தனர். அதற்கு சனிக்கிழமை நிகழ்ச்சியின் போது சரவணன் வெளியேற்றப்பட்டதற்கான காரணம் தெரியவரும் என்று பிக்பாஸ் கூறினார்.

சரவணன் வெளியேற்றப்பட்டதற்கு நேற்று பதில் கிடைக்கும் என்று பார்வையாளர்கள் காத்திருந்த நிலையில் கமல்ஹாசன் அதுபற்றி பேசவில்லை. போட்டியாளர்கள் யாராவது இதுகுறித்து கேள்வி எழுப்புவார்களா என்று காத்திருந்த ரசிகர்களுக்கு எதுவுமே நடக்காமல் போனது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன் | சரவணன்


அதேவேளையில் சில தினங்களுக்கு முன் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்த கஸ்தூரியை சுட்டிக்காட்டிய கமல்ஹாசன், பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற பழமொழியை அவர் பாணியில் பேசினார். இதில் பழையது என்பதை சரவணனைத் தான் அவர் குறிப்பிடுகிறாரா? என்ற கேள்வியும் எழுகிறது.

இதற்கு முன்னர் நிகழ்ச்சியின் பாதியில் வெளியேறும் போட்டியாளர்கள் வார இறுதி நாட்களில் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு பிரியாவிடை கொடுக்கும் பிக்பாஸ் குழு. முதல் சீசனில் பரணி, ஓவியாவுக்கும் அப்படித்தான் நடந்தது. ஆனால் சரவணன் விவகாரத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை.

இதனிடையே சர்ச்சைக்குரிய தனது கருத்துக்காக மன்னிப்பு கோரிய பிறகும் சரவணன் வெளியேற்றப்பட்டதற்கு பல்வேறு காரணங்களும் பேசப்படுகின்றன. அதில், சரவணன், கமல்ஹாசனை ஒருமையில் பேசியதால் தான் அவர் வெளியேற்றப்பட்டார் என்றும், அதற்கான ஆதாரமாக ஒரு வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து இன்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தனது மவுனத்தை கலைத்து, பார்வையாளர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் விளக்கமளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

First published: August 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...