மத்தவங்கள காயப்படுத்துறத பத்தி கவலையே படமாட்டாரு சேரன் - பார்த்திபன் ஓபன் டாக்!

news18
Updated: September 17, 2019, 4:50 PM IST
மத்தவங்கள காயப்படுத்துறத பத்தி கவலையே படமாட்டாரு சேரன் - பார்த்திபன் ஓபன் டாக்!
சேரன் | பார்த்திபன்
news18
Updated: September 17, 2019, 4:50 PM IST
இயக்குநர் சேரனுடன் பணியாற்றிய பார்த்திபன், அவரிடம் பிடிக்காத விஷயங்கள் பற்றி மனம் திறந்துள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதில் பங்கேற்றிருக்கும் போட்டியாளர்கள் குறித்து அவர்களுக்கு நெருக்கமானவர்கள் இணைய ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகின்றனர்.

அந்தவகையில் ஒத்த செருப்பு படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், சேரன் குறித்து இணைய ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.


அதில் பார்த்திபன் கூறியிருப்பதாவது, சேரன் சமூக அக்கறையுள்ள ஒரு சின்சியரான இயக்குநர். அவருடைய பாரதிகண்ணம்மா படம் சாதி ஒழிப்பு பற்றி பேசிய படம். அந்தப் படம் எடுக்கும்போது ரொம்ப சீரியஸாக இருப்பதாக நான் நினைத்தேன். அப்போது நானும், வடிவேலும் வேறு ஒருபடத்திற்காக உருவாக்கி வைத்திருந்த காமெடி டிராக்கை அந்தப் படத்தில் பயன்படுத்தி கலகலப்பாக மாற்றினோம்.

ஆனால் அதற்கு சேரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். என்னுடைய காமெடி டிராக்கை பயன்படுத்த ஒத்துக் கொள்ளவே இல்லை. ஏனெனில் என்னுடைய ஐடியா வெற்றி பெற்றுவிட்டால் அவருக்கு பெயர் கிடைக்காது என்று சேரன் நினைத்தார். பின்னர் நாங்கள் பேசி அவரை சம்மதிக்க வைத்தோம்.

அதற்கு பின்னர் வெற்றிக் கொடிகட்டு படத்தில் காமெடி சீன்ஸ் உருவாக்கி என்னையும் வடிவேலுவையும் நடிக்க வைத்தார். அந்த அளவுக்கு ரொம்ப சின்சியரான இயக்குநர்.

Loading...

அவரிடம் பிடிக்காத சில விஷயங்களும் இருக்கின்றன. ஒருமேடையில் ஏதோ ஒரு குப்பைப் படத்தைப் பார்த்துவிட்டு என்ன பார்த்திபன் மாதிரி படம் எடுத்திருக்கிறீர்கள் என்றார். மற்றவர்களை காயப்படுத்துவதைப் பற்றி கவலையேபட மாட்டார். இதுதான் அவரிடம் பிடிக்காத விஷயம். ஒத்த செருப்பு படத்தின் பணிகளில் பிஸியாக இருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை. எனவே அந்நிகழ்ச்சியில் சேரனின் நடவடிக்கைகளை பற்றி விமர்சிக்க விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.

வீடியோ பார்க்க: யூ டியூப் படையுடன் விஜய்

First published: September 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...