பிக்பாஸ் குறித்த சேரனின் பதிவு... நெகிழ்ந்த நெட்டிசன்ஸ்...!

பிக்பாஸ் குறித்த சேரனின் பதிவு... நெகிழ்ந்த நெட்டிசன்ஸ்...!
இயக்குநர் சேரன்
  • News18
  • Last Updated: September 24, 2019, 1:13 PM IST
  • Share this:
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சேரன் தன்னை ஆதரித்த பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இரண்டு சீசன்களின் வெற்றியை அடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 16 போட்டியாளர்களில் ஒருவராக தேசிய விருது பெற்ற இயக்குநர் சேரன் கலந்து கொண்டார்.

சேரன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பார்வையாளர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அவருக்கு பிக்பாஸ் வீட்டில் நடந்த சில பிரச்னைகளால் திரைத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். அதனால் அவரை வெளியே அழைத்துவர வேண்டும் என்றும் இயக்குநர் வசந்தபாலன் கூறியிருந்தார். ஆனால் விஜய்சேதுபதி தான் தன்னை நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்ததாகவும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார்.


பிக்பாஸ் வீட்டில் 91 நாட்கள் தங்கியிருந்த சேரனுக்கு பார்வையாளர்கள் தொடர்ந்து தங்களது ஆதரவை அளித்தனர். ஒருகட்டத்தில் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட சேரன் ரகசிய அறையில் தங்கவைக்கப்பட்டார். பின்னர் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த சேரன் கடந்த வார இறுதியில் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தலைவணங்கி நிற்கிறேன்.எனது 91நாட்கள் பிக்பாஸ் பயணத்தை சரியாக புரிந்துகொண்டு என்னை தாலாட்டி தட்டிக்கொடுத்து என் அன்பின் பக்கம் நின்ற நல்இதயங்களுக்கும் நன்றி. நேர்மை, நற்பண்பு, உண்மையின் பக்கம் நிற்கும் நீங்களே தலைசிறந்த மனிதர்கள். மீண்டும் என்னை உங்களில் ஒருவனாக ஏற்றதில் மகிழ்ச்சிபதிவிட்டிருக்கும் சேரன்” என்று கூறியுள்ளார்.

பிகில் இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி கொடுத்தது ஏன்? - கல்லூரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கும் தமிழக அரசுதலைவணங்கி நிற்கிறேன்..இதைப்பார்த்த நெட்டிசன்கள் நெகிழ்ந்து தங்களது கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.வீடியோ பார்க்க: மசாஜ் சென்டர் பெண் மர்ம மரணம் - பக்காடி ரம், நூடுல்ஸ் காரணமா?

First published: September 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading