சேரனை வெளியே அழைத்த கமல்... கையைப் பிடித்து அழும் லாஸ்லியா...!

சேரனை வெளியே அழைத்த கமல்... கையைப் பிடித்து அழும் லாஸ்லியா...!
பிக்பாஸ்
  • News18
  • Last Updated: September 8, 2019, 4:26 PM IST
  • Share this:
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சேரன் வெளியேற்றப்பட்டிருப்பதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் போட்டியாளர்களாக உள்ளனர். இதில் முகென், சேரன், ஷெரின், கவின், லாஸ்லியா ஆகியோர் இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் ஒருவர் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் இன்று வெளியேற்றப்படுவார்.

அதனடிப்படையில் இயக்குநர் சேரன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே செல்வதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து தற்போது புரமோ வீடியோ ஒன்றையும் நிகழ்ச்சிக் குழு வெளியிட்டுள்ளது. அதில், சேரனிடம் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவது குறித்து கேள்வி எழுப்பும் கமல்ஹாசன், தனது கையிலிருக்கும் அட்டையை பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களிடமும், பார்வையாளர்களிடமும் காண்பிக்கிறார். அதில் சேரன் பெயர் இடம்பெற்றிருப்பதைப் பார்க்கும் ஹவுஸ்மேட்ஸ் அதிர்ச்சியடைகின்றனர்.


உடனே எதிர்பார்க்கவில்லை என்பதைவிட எனக்கு புரியவே இல்லை என்று கூறும் வனிதா, இது எதைநோக்கிப் போகிறது என்றும் கேள்வி எழுப்புகிறார். இதையடுத்து சேரனின் கையைப் பிடித்து அழும் லாஸ்லியா, இது நியாயமில்லை. நீங்க தான் இங்க இருக்கனும். நான் தான் வெளியில் போகனும் என்கிறார். அவரை சமாதானப்படுத்தும் சேரன் அங்கிருந்து வெளியேறுகிறார்.

இதையும் படிங்க: திடீர் மரணத்தால் சோகத்தில் ஆழ்ந்த தேவயானி குடும்பம்!

ஆனாலும் சேரன் ரகசிய அறைக்குள் தங்க வைக்கப்பட்டு, மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவார் என்றே தகவல்கள் வெளியாகியுள்ளன.

Loading...வீடியோ பார்க்க: இத பார்த்தவுடன் குபீரென சிரிப்பு வரும்...

First published: September 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...