வனிதாவின் சண்டையால் பிக்பாஸ் வீட்டிற்குள் அழும் லாஸ்லியா... வருத்தத்தில் ரசிகர்கள்!

பிக்பாஸ் வீட்டிற்குள் மிகவும் கூலாக இருந்த பெண் போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா.

வனிதாவின் சண்டையால் பிக்பாஸ் வீட்டிற்குள் அழும் லாஸ்லியா... வருத்தத்தில் ரசிகர்கள்!
பிக்பாஸ் போட்டியாளர் லாஸ்லியா
  • News18
  • Last Updated: July 11, 2019, 12:55 PM IST
  • Share this:
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த போட்டியாளர் லாஸ்லியா அழுகும் வீடியோ வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் 23-ம் தேதி துவங்கியது. பாத்திமா பாபு, லாஸ்லியா, சாக்‌ஷிஅகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா, விஜய்குமார், சேரன், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ், ரேஷ்மா, மீரா மிதுன் ஆகிய 16 பேர் போட்டியாளர்களாக பங்கேற்றனர்.

இரண்டாவது வார இறுதியில் பிக்பாஸ் வீட்டிலிருந்து பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் மூன்றாவது வாரத்தில் வீட்டின் தலைவராக அபிராமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.


நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே வனிதாவின் நடவடிக்கைகள் பார்வையாளர்களின் விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றன. ஒவ்வொரு சீசனிலும் ஒருவர் நிகழ்ச்சியின் பேசுபொருளாகவும், வில்லியாகவும் ரசிகர்களால் பார்க்கப்படுவர். அந்தவகையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமாரை வில்லியாகவே பார்த்து வருகின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.

அதற்கு காரணம், அவர் மற்ற போட்டியாளர்களை அணுகும் விதம், அவர்களுக்கு எதிராக வனிதா பேசுவது போன்ற செயல்கள் தான் என்பது பார்வையாளர்களின் சமூக வலைதள பதிவுகளை பார்த்தாலே புரியும்.

இந்நிலையில் 18-வது நாளான இன்று வெளியான முதல் புரோமோ வீடியோவில் வனிதா சாக்சிக்கு ஆதரவாக லாஸ்லியாவின் மனம் புண்படும் வகையில் பேசியிருப்பார்.இதனால் மனமுடைந்த லாஸ்லியா கவின் தன்னுடன் பேசுவதுதான் இந்த சண்டைக்கு காரணம் என்று கூறி கவினை இனி தன்னிடம் பேச வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் மிகவும் கூலாக இருந்த பெண் போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. தான் என்ன செய்கிறோம், எப்படி இருக்கோம் என தெளிவாக யோசனையில் அவர் அங்கு பயணிக்கிறார்.

இந்நிலையில் அவர் அழுவது போன்ற வீடியோ பிக்பாஸ் குழுவினர் வெளியிட்டு இருப்பதை பார்த்த ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

Also see...

First published: July 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்