பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் ஷிவானி. அதற்கு முன்னர் சரவணன் மீனாட்சி தொடரில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் பகல் நிலவு சீரியலில் தான் பிரபலமானார். அதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய தொடர்களில் நடித்தார். அவரின் போதாத காலம் அந்த இரண்டு சீரியலிலும் ஏதோ பஞ்சாயத்து ஆகி சீரியலில் இருந்து விலகிவிட்டார்.
சீரியல் வாய்ப்புகள் இல்லாமல் போனாலும் இன்ஸ்டாகிராமில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. கிளாமரான மாடர்ன் காஸ்டியூமில் அடிக்கடி போட்டோ மற்றும் வீடியோக்கள் பதிவிட்டு வந்த ஷிவானி இன்ஸ்டாகிராம் செலிபிரிட்டி ஆனார். அதன் விளைவாக ஜாக்பாட் அடித்தது போல் பிக் பாஸ் வாய்ப்பு தேடி வந்தது.
பிக் பாஸ் வீட்டிலும் பெரிதாக எந்த பிரச்சனையிலும் தலையிடாமல் அமைதியாக இருந்தார். ஆனாலும் பிக் பாஸ் வீட்டினுள் பாலாவுடன் கொஞ்சம் நெருக்கம் காட்டியதால் வெளியே இவரின் பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆனது. ஷிவானியின் அம்மா ஃப்ரீஸ் டாஸ்கில்
பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தபோது ஷிவானியின் போக்கு சரியில்லை என்று கண்டித்தார்.

ஷிவானி நாராயணன், பொன் ராம்
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஷிவானிக்கு கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் முக்கிய ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை தவிர்த்து சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் சொல்லிக் கொள்ளும்படி எந்த வாய்ப்பும் வரவில்லை. இந்நிலையில் இயக்குநர் பொன் ராம் படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி என்று தன் இன்ஸ்டாவில் இன்று புகைப்படத்துடன் பதிவிட்டிருக்கிறார் ஷிவானி.
இதையும் படிங்க..
மைனா நந்தினி பெரிய வீடு வாங்கிட்டாரா? - உண்மை என்ன
சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் மற்றும் சீம ராஜா ஆகிய படங்களை இயக்கியவர் தான் இயக்குநர் பொன்ராம். தற்போது ‘சன் பிக்ச்சர்’ தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் `VJS46' படத்தை இயக்கி வருகிறார். திண்டுக்கல்லில் தற்போது ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக ஷிவானி நடித்து வருகிறார். பொன் ராம் மாதிரியான ஜாலியான இயக்குநருடன் பணிபுரிவதில் மகிழ்ச்சி என குறிப்பிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார் ஷிவானி.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.