இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை வெளியிட்டு மாப்பிள்ளை எங்கே எனக் கேட்டிருக்கிறார் நடிகை ஷெரின்.
கடந்த 2002-ம் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ’துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் நடிகை ஷெரின். இதையடுத்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். பின்னர் படங்களில் நடிக்காமல் இருந்த ஷெரின், நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துக் கொண்டு ரசிகர்களின் மனதை வென்றார்.
உடல் எடையால் அவதிப்பட்ட அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் படிப்படியாக அவரது எடை குறைந்தது. தற்போது இன்னும் அக்கறை எடுத்து உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஷெரின் தற்போது தான் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘பொண்ணு ரெடி, மாப்பிள்ளை எங்கே?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக ரசிகர்கள் பாய்ந்து பாய்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்