ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக்பாஸ் டைட்டில் வின்னரானார் அசீம் - குவியும் வாழ்த்து

பிக்பாஸ் டைட்டில் வின்னரானார் அசீம் - குவியும் வாழ்த்து

அசீம்

அசீம்

அசீமுக்கு ரசிகர்கள் ஒரு பக்கம் வாழ்த்து தெரிவிக்க மற்றொரு பக்கம் பிக்பாஸ் மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டுவருகின்றன. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

21 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டி இன்று மாலை 7 மணி முதல் ஒளிபரப்பாகி வந்தது. கடந்த சீசன்களை போல் இந்த சீசனில் சுவாரசியம் சற்று குறைவாகவே இருப்பதாக ரசிகர்களின் கருத்தாக இருந்துவருகிறது.

சமீபத்தில் விஜே கதிரவன் பணப்பெட்டி டாஸ்க்கில் ரூ.3 லட்சத்தை எடுத்துகொண்டு வெளியேறினார். அதன் பிறகு நடந்த எவிக்ஷனில் மைனா நந்தினி வெளியேறினார். தற்போது பிக்பாஸ் வீட்டில், விக்ரமன், ஷிவின் அசீம் ஆகிய 3 பேர் மட்டுமே உள்ளனர்.

மூன்று பேருமே கடுமையான போட்டியாளர்கள் என்பதால் வெல்லப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. பிக்பாஸ் தமிழ் 6 போட்டியின் வெற்றியாளருக்கு ரூ.50 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடத்தில் விக்ரமனும் 3வது இடத்தில் ஷிவினும் இடம் பிடித்தனர். வெற்றிபெற்ற மூவருக்கும் சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக அசீமுக்கு ரசிகர்கள் ஒரு பக்கம் வாழ்த்து தெரிவிக்க மற்றொரு பக்கம் பிக்பாஸ் மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டுவருகின்றன.

First published:

Tags: Bigg Boss Tamil 6, Kamal Haasan