ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'தொடங்கவே இல்லை.. அதற்குள் வைரல்'.. பிக்பாஸ் எண்ட்ரியா ஜனனி? இன்ஸ்டாவை மொய்க்கும் ரசிகர்கள்!

'தொடங்கவே இல்லை.. அதற்குள் வைரல்'.. பிக்பாஸ் எண்ட்ரியா ஜனனி? இன்ஸ்டாவை மொய்க்கும் ரசிகர்கள்!

ஜனனி

ஜனனி

பிக் பாஸ் சீசன் 6 முடிவதற்குள்ளாகவே அவரைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை சில லட்சங்களை தாண்டிவிடும் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிக் பாஸ் சீசன் 6-ல், இலங்கையைச் சேர்ந்த மாடலும், தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான ஜனனி பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், அவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்பற்றுவோர் எண்ணிக்கை, விறுவிறுவென உயர்ந்து வருகிறது.

  பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 இன்று தொடங்க உள்ளது. இதில் இலங்கையைச் சேர்ந்த ஜனனி போட்டியாளர்களில் ஒருவராக இருக்கிறார்.

  23 வயதாகும் ஜனனி மாடலாகவும், தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வருகிறார். பிரபல யூடியூப் சேனலில் இவரது நிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பை பெற்றன. ஜனனி தற்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வருகிறார்.

  'மனச மயக்குது..! மல்லிப்பூ பாடலை விடாமல் கேட்கிறேன்'.. தாமரை, ரஹ்மானை சிலாகித்து பாராட்டிய சீமான்!

  இலங்கையில் ஐபிசி தமிழ் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகும் உணவு மற்றும் உடல் நலம் சார்ந்த நிகழ்ச்சிகளை ஜனனி தொகுத்து வழங்கி வருகிறார். ஜனனியும் பிரபல தொகுப்பாளினி லக்சனாவும் இணைந்து டக் டிக் டோக் என்ற காமெடி நிகழ்ச்சியை வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகும்.

  ஜனனியின் முழுப்பெயர் ஜனனி குணசீலன் என்பதாகும். இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்வோர் எண்ணிக்கை விறுவிறுவென உயர்ந்து வருகிறது.

  ‘கதை சொல்ல ஆரம்பித்த என்னை சிவாஜி சார் விரட்டி விட்டார்’ – சுவாரசிய சம்பவத்தை சொல்லும் இயக்குனர் பி.வாசு

  பிக் பாஸ் சீசன் 6 முடிவதற்குள்ளாகவே அவரைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை சில லட்சங்களை தாண்டிவிடும் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர். தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

  Published by:Musthak
  First published:

  Tags: Bigg Boss Tamil 6